ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சிவா.. 15-ல் தொடங்குகிறது அண்ணாத்த ஷூட்டிங்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
சென்னை: ரஜினியின் அண்ணாத்த ஷூட்டிங் வரும் 15 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்க இருக்கிறது என சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளை அவர் ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது. ட்விட்டரில் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் அண்ணாத்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
Recommended Video

அண்ணாத்த அப்டேட்
இந்நிலையில், ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ரஜினியின் 168 வது படமான இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

கொரோனா பரவல்
இந்தப் படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம்சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்து விட்டது. மார்ச் மாதம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனால், நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்
அக்டோபர் மாதம் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் குறைந்த பின் ஷூட்டிங் செல்ல முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வரும் 15 ஆம் தேதி அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை சன் பிக்சர்ஸ் இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

நீண்ட ஆயுளுடன்
சிறுத்தை சிவா ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ், இதை தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் சிவா கூறியிருப்பதாவது: அண்ணாத்த டீம் சார்பாக ரஜினி சாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் மேலும் மேலும் வளர்ந்து நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

நல்ல டீமுடன்
ரசிகர்களின் வாழ்த்துகளுடன் ஆதரவுடன் இறைவனின் நல்லாசியுடன் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை துவங்குகிறோம். சந்தோஷமாக இருக்கிறது. நல்ல டீமுடன் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் மிகப்பெரிய படமாக அண்ணாத்த வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











