அதிக விலைக்கு விற்கப்படும் ‘’அண்ணாத்த’’ டிக்கெட்... ரசிகர்கள் ஷாக் !
சென்னை : தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த திரைப்படம் அமெரிக்காவில் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் நவம்பர் 3ந் தேதி வெளியாகி உள்ளது.
கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரஜினிகாந்த், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணி கொண்ட கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணாத்த
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் அண்ணாத்த இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணன் தங்கை பாசம்
சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த திரைப்படம் தயாராகி உள்ளது. அண்ணன், தங்கை பாசம் இப்படத்தில் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. ரஜினி அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளார்.

பாடல்கள் ஹிட்
ரஜினிகாந்திற்காகக் கடைசியாகப் பாடிய அண்ணாத்த...அண்ணாத்த... என்ற பாடல் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. அதேபோல, நயன்தாராவுடன் டூயட் பாடலான சாரல்..சாரல் காற்றே...மெலடி பாடலாக இருந்தது. மருதாணி... என்ற பாடல் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலர் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
Recommended Video

அதிகவிலைக்கு டிக்கெட்
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் அமெரிக்காவில் 700 திரையரங்குகளில் நவம்பர் 3ந் தேதி வெளியாக உள்ளது. இதனால், அமெரிக்காவில், அண்ணாத்த படத்தின் டிக்கெட் விலையை விநியோகஸ்தர் அறிவித்த விலையை விட சற்று அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி கடைசியாக நடித்த தர்பார் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் படம் வெளியாக உள்ளதால், அண்ணாத்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











