ஆரவாரமாய்...ஆக்ரோஷமாய்...ஆனந்தமாய்...தூள் பறக்கும் அண்ணாத்த டிரைலர்

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி தினமான நவம்பர் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அனல் பறக்கும் , மாஸ் டிரைலரை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

ஆரவாரமாய்...ஆக்ரோஷமாய்...ஆனந்தமாய் என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த டிரைலர் செம வைரலாகி வருகிறது. இந்த டிரைலரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

நீ யாருங்கறது நீ சேர்த்து வைத்துள்ள சொத்துலயோ, உன்னை சுற்றி இருப்பவர்கள் உன் மீது வைத்துள்ள பயத்திலோ இல்லை. நீ செய்கிற செயல்ல, உன் பேச்சுல இருக்கு. இது தெய்வ வாக்கு என ரஜினி பேசும் டயலாக்குடன் இந்த டிரைலர் ஆரம்பமாகிறது. அண்ணன் - தங்கை பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், கிராமத்து தலைவரின் கெத்து, காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இந்த டிரைலர் அமைந்துள்ளது.

கேரக்டர்களை காட்டிய டிரைலர்

கேரக்டர்களை காட்டிய டிரைலர்

இதில் ரஜினியின் பாசமிகு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் வில்லன் ரோலில் நடித்துள்ளார்கள் என தெரிவாக தெரிகிறது. குஷ்பு, மாமா என்றும், மீனா அத்தான் என்றும் ரஜினியை கூப்பிடுகிறார்கள். அதே சமயம் ரஜினி நயன்தாராவுடன் காதலை பொழிகிறார். இதன் மூலம் குஷ்பு மற்றும் மீனா ரஜினிக்கு தங்கை ரோலில் இல்லை, ரஜினியை திருமணம் செய்து கொள்ள போட்டி போடும் கேரக்டரில் நடித்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

கொல்கத்தாவுக்கே காப்பு

கொல்கத்தாவுக்கே காப்பு

வில்லனிடம், கொல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன். உன்னை மதுரைவீரன் சாமிக்கு நேந்து விட்டுட்டேன்னு ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கும், ஒரு பெண் நேர்மை, தையரித்துடன் இருந்தால் அந்த கடவுளே அவளுக்கு துணையாக வந்து நிற்பார் என பேசும் டயலாக்கும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

காமெடி கலக்கல்

காமெடி கலக்கல்

சூரி, சத்யன், சதீஷ் ஆகியோர் காமெடியில் ரஜினிக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள் என நன்றாக தெரிகிறது. கிராமத்து தலைவராக இருக்கும் ரஜினி, அநியாயத்தை தட்டி கேட்க வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள், பாசத்தை காட்டும் சீன்கள் நிச்சயம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் கவர்வதாக உள்ளது.

டிரெண்டிங்கில் அண்ணாத்த

டிரெண்டிங்கில் அண்ணாத்த

அண்ணாத்த டிரைலர் இன்று ரிலீசாவதாக நேற்று அறிவிப்பு வெளியானது முதலே அண்ணாத்த டிரைலர், ரஜினிகாந்த் ஆகிய ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகின. தொடர்ந்து 24 மணிநேரத்திற்கும் அதிகமாக இந்த ஹாஷ்டேகுகள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. அண்ணாத்த டிரைலர் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கில் பார்வைகளும், லைக்குகளும் குவிந்துள்ளது.

சாதனை படைக்கும்

சாதனை படைக்கும்

அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட், செகண்ட், மூன்றாவது சிங்கிள் ஆகியவற்றை விட இந்த டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X