மீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு? வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார்
தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களை இயக்கி வந்த இயக்குநர் சிவா, அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் பரவிய நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

4 ஹீரோயின்கள்
அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் ஹீரோயின்களான குஷ்பு மற்றும் மீனா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். சந்திரமுகி, குசேலன், தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்த நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட நடிகர்கள்
குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்களை தவிர்த்து வில்லனாக பிரகாஷ் ராஜ், காமெடிக்கு நடிகர்கள் சூரி மற்றும் சதீஷ் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படியொரு பெரிய கூட்டத்தை வைத்து இந்த கொரோனாவுக்கு பிறகு எப்படி இயக்குநர் பாதுகாப்பான முறையில் படம் எடுக்கப் போகிறார் என்பதே சவாலான விஷயம் தான்.

ரஜினி கோரிக்கை
அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவிய நிலையில், படப்பிடிப்பை அடுத்த ஆண்டு வைத்துக் கொள்ளுங்கள், நடிகர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதி இதனை செய்யுங்கள் என ரஜினி முன்னதாக கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், தற்போது அடுத்த மாதமே அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

வழக்கம் போல
கொரோனா ஒரு பக்கம் கிடக்கட்டும் என மக்கள் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அடுத்த மாதம் முதல் கல்லூரி, பள்ளிகளும் இயங்க உள்ள நிலையில், ஏகப்பட்ட படப்பிடிப்புகளையும் தயாரிப்பாளர்கள் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏர்போர்ட்டில் கீர்த்தி சுரேஷ்
மேலும், அண்ணத்த படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய புகைப்படங்களும் சமூகத்தில் வைரலாகி வரும் நிலையில், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவது உறுதி ஆகி உள்ளது. ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா? இல்லை தாமதமாகுமா? என்கிற விபரங்கள் விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











