28 வருசமா நம்பர் 1... TRP-யிலும் தரமான சம்பவம் செய்த பாட்ஷா... ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
ஜெயிலரை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம், அடுத்து தலைவர் 171 படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த பாட்ஷா திரைப்படம் தரமான சாதனை படைத்துள்ளது.
ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 28 வருடங்கள் பாட்ஷா திரைப்படம் செய்துள்ள இந்த சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரியல் கேங்ஸ்டர் பாட்ஷா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம், ஒட்டுமொத்த திரையுலகையே அதிர வைத்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் நக்மா, ஜனகராஜ், ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முக்கியமான தேவாவின் இசையில் பாடல்களும் ரஜினிக்காக கம்போஸ் செய்யப்பட்ட மாஸ் பிஜிஎம்மும் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தன. ரஜினியின் கேரியரில் வெறித்தனமான ஹிட் கொடுத்த படம் என்றால், அது நிச்சயம் பாட்ஷாவாக தான் இருக்க முடியும்.

28 வருடங்களாக நம்பர் 1
1995ல் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த பாட்ஷா, வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். ஆனால், பாட்ஷா 2 உருவாக வாய்ப்பில்லை என ரஜினியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் உறுதியாக மறுத்துவிட்டனர். காரணம், இனிமேல் அப்படியொரு மேஜிக்கல் திரைக்கதையை உருவாக்குவது கஷ்டம் என சுரேஷ் கிருஷ்ணா கூறிவிட்டார். இந்நிலையில், இந்தப் படம் 28 வருடங்களாக தொலைக்காட்சி டிஆர்பியில் நம்பர் 1 இடம் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டிஆர்பியில் நம்பர் 1 பாட்ஷா
அதன்படி, தொலைக்காட்சி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமை பாட்ஷாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது அதிகபட்ச டெலிவிஷன் ரேட்டிங் பெற்ற படம் எனும் சாதனை பாட்ஷாவுக்கு கிடைத்துள்ளது. 11.79 TVR rating - தொலைக்காட்சி மதிப்பீட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 9.48 மில்லியன் பார்வையாளர்கள் பாட்ஷா படத்தை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளனர். தமிழில் டிஆர்பி அடிப்படையில் சாதனை படைத்த படமாகவும் பாட்ஷா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
தொலைக்காட்சி வரலாற்றிலேயே இந்த சாதனையை மற்ற டாப் நடிகரால் முறியடிக்க முடியவில்லை என ரஜினியின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் படங்களுக்கு திரையரங்குகளையும் கடந்து மக்களிடம் வரவேற்பு உள்ளது என்பதற்கு இது சான்றாகியுள்ளது. ரியல் கேங்ஸ்டர் ஜானர் படமாக உருவான பாட்ஷா, ரஜினிக்கும் ஆல்டைம் ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொலைக்காட்சியில் பாட்ஷா திரைப்படம் நிகழ்த்திய சாதனையை, ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விரைவில் ஜெயிலர் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா, ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











