twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா?.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட படங்கள்!

    By
    |

    சென்னை: ரஜினிகாந்துக்கு நாளை 70 வது பிறந்த நாள். நலத்திட்ட உதவிகள், வாழ்த்து போஸ்டர்கள் என பரபரத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். சமூக வலைத்தளக் கொண்டாட்டங்கள், ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.

    ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 167 படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள 167 வது படமான தர்பார் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 168 வது படத்தின் ஷூட்டிங் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள சிறந்த 5 கன்னடப் படங்களாக இதைக் குறிப்பிடுகிறார்கள் விமர்சகர்கள். அது பற்றிய விவரம்.

    1. கதா சங்கமா (katha sangama):

    1. கதா சங்கமா (katha sangama):

    ரஜினிகாந்தின் 2 வது படம் இது. கன்னடத்தில் முதல் படம் இது. புட்டண்ணா கனகல் இயக்கிய இது, ஹங்கு, அதிதி, முனிதாயி ஆகிய மூன்று சிறுகதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆன்தாலஜி படம். கல்யாண் குமார், ரஜினி, சரோஜாதேவி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் 'முனிதாயி' கதையைதான், 'கைக்கொடுக்கும் கை' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் மகேந்திரன்.

    2. ஒன்டு பிரேமதா கதே (Ondu Premada Kathe):

    2. ஒன்டு பிரேமதா கதே (Ondu Premada Kathe):

    கருப்பு வெள்ளையில் உருவான முதல் தென்னிந்திய சினிமாஸ்கோப் படம். கன்னடத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படமும் இதுதான். ஜோ சைமன் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக சாரதா நடித்திருப்பார். இதில் மற்றொரு ஹீரோவாக அசோக் நடித்திருந்தார். 1977 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.

    3. கில்லாடி கிட்டு (Kiladi Kittu):

    3. கில்லாடி கிட்டு (Kiladi Kittu):

    கே.எஸ்.ஆர்.தாஸ் இயக்கிய இந்தப் படத்தில் விஷ்ணுவர்தனுடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினிகாந்த். போலீஸ் அதிகாரி கேரக்டர். இவர்கள் இருவர் காம்போவுக்கு கன்னடத் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு. லீலாவதி, கவிதா உட்பட பலர் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு பேசப்பட்டது.

    4. சகோதரர சவால்: (Sahodarara Savaal)

    4. சகோதரர சவால்: (Sahodarara Savaal)

    இதுவும் கே எஸ்.ஆர்.தாஸ் இயக்கிய படம்தான். இதிலும் விஷ்ணுவர்தனும் ரஜினியும் இணைந்து நடித்திருந்தனர். பாலகிருஷ்ணா, ஜெயலட்சுமி, கவிதா, லீலாவதி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் 1977 ல் வெளியானது. இது தமிழில் சகோதர சகாப்தம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. தெலுங்கு ரீமேக்கில் கிருஷ்ணாவுடன் நடித்திருந்தார் ரஜினி.

    5. பிரியா (priya)

    5. பிரியா (priya)

    தமிழில் வெளியான அதே 'பிரியா'தான். சுஜாதாவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், தமிழ், கன்னடத்தில் உருவானது. அம்பரீஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகையான ஶ்ரீதேவிக்கு உதவும் வழக்கறிஞராக நடித்திருப்பார் ரஜினி. இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம் 78 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

    English summary
    super star Rajinikanth's best 5 kannada movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X