ரஜினிகாந்த் சகோதரருக்கு மாரடைப்பு..ரொம்ப சீரியஸ்.. பெங்களூரு பறந்த சூப்பர் ஸ்டார்.. பதற்றத்தில் குடும்பம்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது உச்ச நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தற்போதைய அவரது வெற்றிக்கு அவரின் கடுமையான உழைப்பும், அவருக்கிருந்த திறமையும் எப்படி காரணமோ அப்படித்தான் அவரது சகோதரர் சத்யநாராயண ராவும். இந்நிலையில் சத்யநாராயணாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருப்பவர். 70 வயதுக்கு மேல் ஆகியும் இன்னமும் சுறுசுறுப்பாக உழைத்துவருகிறார்.கூலி படத்தில் நடித்து முடித்த அவர் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சமீபத்தில்தான் அதற்கான அறிவிப்பு வெளியானது.

ரஜினியின் வளர்ச்சிக்கு உதவி: ரஜினிகாந்த் நடத்துநராக இருந்து பிறகு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் படித்து நடிகராக மாறியவர் என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி சென்னைக்கு வருவதற்கு இரண்டு பேர் முக்கிய காரணங்களாக இருந்தார்கள். ஒருவர் அவரது நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர்; ஒன்னொருவர் அவரது சகோதரர் சத்யநாராயணா கெய்க்வாட் ஆவார். தனது ஆசையை ரஜினி வெளிப்படுத்தியபோது இரண்டு பேரும்தான் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

Rajinikanth s Brother Sathyanarayana Hospitalized After Heart Attack Superstar Rushes to Bengaluru
Photo Credit:

சத்யநாராயணாவின் பங்கு: சத்யநாராயணாவை பொறுத்தவரை ரஜினியை வளர்த்தவரும் அவரே. முக்கியமாக ஒரு தந்தை ஸ்தானத்தில் அனைத்தையும் செய்தவர். குறிப்பாக ரஜினி தனது இள வயதில் செய்த சில செயல்களை கடுமையாக கண்டித்தவரும் நல்வழிப்படுத்தியவரும் அவரே. ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகும் அவர் மீது தனிப்பட்ட மரியாதையையும், பாசத்தையும் வைத்திருக்கிறார்.

உடல்நல குறைவு: இந்நிலையில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதாவது பெங்களூரிவில் இருக்கும் ஹொசகேரேஹள்ளியில் வசித்துவரும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரது குடும்பத்தினவர் அவரை பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பெங்களூரு பறந்த ரஜினி: அவருக்கு வயது 84 ஆகும். தனது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் உடனடியாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் ரஜினி. அவரது உடல்நலம் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் சத்யநாராயணாவின் உடல்நிலை ரொம்பவே மோசமாக இருப்பதாகவும் அதன் காரணமாக ரஜினியும் அவரது குடும்பத்தினரும் உச்சக்கட்ட பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரஜினியின் ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X