விஜய்யால் ஒன்னுமே செய்ய முடியாது.. ரஜினி சகோதரர் இப்படி போட்டு அடிக்கிறாரே.. என்ன சொன்னார்?

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய்; தனது பணிகளை மும்முரமாக செய்துவருகிறார். அவர் தலைமை செயலகத்துக்கு மதிய சாப்பாட்டை கையோடு எடுத்துவருவதாகவும்; காலை பத்து மணியிலிருந்து நான்கு மணிவரை அங்கேயே இருப்பதாகவும் விர்ச்சுவல் வாரியர்ஸ் ஃபயர் விட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிற்து.

தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் நினைத்தது விஜய்யின் கட்சி பத்து தொகுதிகளைகூட தாண்டாது என்பதைத்தான். ஆனால் அவர்களின் எண்ணங்களை அழித்துவிட்டு மொத்தம் 108 தொகுதிகளில் வென்றுவிட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்ததை அடுத்து முதலமைசராக பதவியேற்ற விஜய்; சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுவிட்டார். கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே பல எதிர்ப்புகளை கடந்து அதிகாரத்தை பிடித்திருக்கும் விஜய்யை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியப்பட்டிருக்கிறது.

Rajinikanth s Brother Says Vijay Cannot Succeed in Tamil Nadu Politics
Photo Credit:

முதலமைச்சர் பணிகள்: பதவியேற்றதிலிருந்து பல பணிகளை செய்துவரும் விஜய்; மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தில் வரும் பணம், பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை உள்ளிட்டவைகளையும் வரவு வைத்திருக்கிறார். கடந்த ஆட்சியில் இருந்த பயன் தரும் திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடரும் விஜய்க்கு அனைவருமே பாராட்டு தெரிவித்துவருகிறார்கள். மேலும் மாற்று கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்தது நாகரீக அரசியலின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

Also Read
Karuppu Day 1 Box Office - கருப்பு முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?
Karuppu Day 1 Box Office - கருப்பு முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?

அரசு ஊழியர் போல்: முக்கியமாக விஜய் காலை 9.55 மணிக்கே தலைமை செயலகத்துக்கு தவறாமல் வந்துவிடுவதாகவும்; அரசு ஊழியர் போல் மாலை நான்கு மணி வரை சின்சியராக வேலை செய்யும் அவர்; மதியத்துக்கான உணவையும் டிஃபன் பாக்ஸில் கட்டி வருகிறார்; இதுபோன்ற ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை என்றும் பல விதமாக விர்ச்சுவல் வாரியஸ் ஃபயர் விட்டுவருகிறார்கள். அதுமட்டுமின்றி இன்னும் 50 வருடங்களுக்கு அவர்தான் இம்மாநிலத்தை ஆள்வார் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள்.

ரஜினி சகோதரர் பேச்சு: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணா பேசியிருக்கும் வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அவர், "அரசியலுக்கு வர வேண்டும் என விஜய் நினைக்கிறார். வந்த பிறகு செய்கிறார் என்று பார்க்கலாம். அவரால் கண்டிப்பாக சாதிக்க முடியாது. அதிலும் தமிழ்நாட்டில் அவரால் வெல்ல முடியாது.இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். எதுவும் சாதிக்க முடியாது. ரொம்பவே கஷ்டம்" என்றிருக்கிறார்.

விஜய் Vs ரஜினி: முன்னதாக திரைத்துறையில் ரஜினிகாந்த்தும், விஜய்க்கும் கடந்த சில வருடங்களாகவே பனிப்போர் நிலவிவருவதாக இன்டஸ்ட்ரியில் இருப்பவர்கள் சொல்வதுண்டு. விஜய் ரசிகர்களும் இனிமேல் சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதிதான் கூறியதும்; அதற்கு ரஜினி ரசிகர்கள் தரமான பதிலடி கொடுத்ததும் நினைவுகூரத்தக்கது. முக்கியமாக ஜெயிலர், லியோ பட சமயத்தில் காக்கா, கழுகு கதையாலும் பிரச்னை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X