சர்கார் ஷூட்டிங் நடந்த இடத்தில் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்கும் நடக்குது.. என்ன சங்கதி தெரியுமா!

Recommended Video

சர்கார் ஷூட்டிங் நடந்த இடத்தில் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு அருகே உள்ள மாதா மெடிக்கல் காலேஜில் நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள தர்பார் படத்தின் ஷூட்டிங் பணிகள், டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ரஜினி ஏன், யூனிஃபார்முடன் நடிக்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முழுக்க முழுக்க மும்பை மற்றும் வட மாநிலங்களில் உருவாக்கப்பட்டு வந்த தர்பார் படத்தின் சில பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே இங்கு ஷூட் செய்யப்பட்டதாகவும் படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும் நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம், வரும் பொங்கலை முன்னிட்டு ரிலீசாகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆதித்ய அருணாச்சலம் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார்.

சர்கார் ஷூட்டிங்

சர்கார் ஷூட்டிங்

சர்கார் படத்தில், ஒவ்வொரு நோயாளியையும் காண்பித்து ஒவ்வொரு டிபார்ட்மென்ட் சரியாக இயங்கவில்லை என்பதை விஜய் சுட்டிக் காட்டும் காட்சி, மாதா மெடிக்கல் காலேஜில் படமாக்கப்பட்டது.

அதே இடத்தில்

தற்போது, அதே இடத்தில் ரஜினியின் தர்பார் பட பேட்ச் ஒர்க் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. சில தினங்களுக்கு ரஜினி அல்லாத காட்சிகளின் பேட்ச் ஒர்க்குகளும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மாதா மெடிக்கல் காலேஜில் ரஜினி வட மாநில போலீஸ் உடையிலேயே வந்து நடித்திருந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூட, அவர்களை பார்த்து ரஜினி கையசைத்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

சும்மா கிழி

சும்மா கிழி

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சும்மா கிழி பாடல் வெளியாகி இதுவரை 15 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. அனிருத் இசையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய சும்மா கிழி பாடலை ரஜினி ரசிகர்கள் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து வருகின்றனர்.

ஆடியோ லான்ச் எப்போ?

ஆடியோ லான்ச் எப்போ?

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சும்மா கிழி வெளியாகி விட்டது. ஆனால், இதுவரை படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த எந்தவொரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனமான லைகாவும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தும் அறிவிக்கவில்லை. முன்னதாக டிசம்பர் 6ம் தேதி தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X