முதல்பாதி காக்டெயில்... வேற லெவல்... சும்மா கிழிச்சிருக்கார் தலைவர்... தர்பார் டிவிட்டர் விமர்சனம்

By

Recommended Video

Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

சென்னை: ரஜினியின் தர்பார் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பற்றி ரசிகர்கள் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், தர்பார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

போலீஸ் கதை

போலீஸ் கதை

படம்பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, இது மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. இதில் ரஜினி அரசியல் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார்.

டிவிட்டரில்

இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். படம் பற்றி, ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல்பாதி காக்டெயில்

ஒரு ரசிகர்கள், படம் முதல்பாதி காக்டெயிலாக இருக்கிறது. காமெடி, ஆக்‌ஷன், காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. இடைவேளையில் புத்திசாலித்தனமான ட்விஸ்ட் ஆச்சரியம் என்று தெரிவித்துள்ளார்.

யூகிக்கக் கூடிய காட்சிகள்

இந்த ரசிகர், தலைவர் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். எளிதில் யூகிக்கக் கூடிய, நியாயமில்லாத காட்சிகள் ஏமாற்றமாக இருக்கிறது. சும்மா கிழியும் பின்னணி இசையும் மிரட்டுகிறது. பழைய மசாலா படத்தை ஞாபகப்படுத்துகிறது தெரிவித்துள்ளார்.

யோகிபாபு காமெடி

ஆன்லைன் ரஜினி ரசிகர் என்ற இவர், முதல் பாதியில் திரைக்கதை பறக்கிறது. தலைவர் மேஜிக்தான். யோகிபாபுவின் காமெடி அருமையாக இருக்கிறது. இன்டர்வெல் பிளாக் மிரட்டல். இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

பிளாக்பஸ்டர்

வனவராயன் என்ற ரசிகர், இது பிளாக்பஸ்டர் படம். ரஜினி இளமையாக இருக்கிறது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இது வேற லெவல். சிறப்பான படம் என்று கூறியுள்ளார்.

கிழிச்சிருக்காரு

கவுசிக் கார்த்திகேயன் என்ற ரசிகர், ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ரஜினி ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். தலைவர் சும்மா கிழிச்சிருக்காரு என்று கூறியிருக்கிறார்.

ஒன்மேன் ஷோ

ஒன்மேன் ஷோ

கமல் எஸ்கேபி என்ற ரசிகர், தலைவரின் இன்னொரு பிளாக்பஸ்டர் படம். எமோஷன், மாஸ் காட்சிகளை சரியாக அமைத்திருக்கிறார் முருகதாஸ். தலைவரின் ஒன்மேன் ஷோ இந்தப் படம். தர்பார் பொங்கல் தொடங்கிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X