கணவருடன் பப்பில்.. மண்டையில் இருக்கும் கொண்டைய மறந்த ரஜினி மகள்.. சரக்கு பாட்டீலை கவனீச்சீங்களா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆசை காதல் கணவர் விசாகன் வணங்காமுடியுடன் பப்பில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் லைக்குகளை குவித்தாலும், சிலரின் பார்வை சரக்கு பாட்டீல் மீது விழுந்துள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி உள்ளனர். இதில் ஐஸ்வர்யா த்ரி, வை ராஜா வை, லால் சலாம் படத்தை இயக்கினார். அக்காவைப் போலவே, சௌந்தர்யாவும், கடந்த 2014ஆம் அண்டு ரஜினிகாந்த நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தை இயக்கினார்.

ரஜினிகாந்த் மகள்: சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும். 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இதையடுத்து, இரண்டாவதாக விசாகன் வணங்காமுடியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2022 ஆண்டு ஆண் குழந்தை பிற்ந்தது. அண்மையில், தனது செல்ல மகன் வீருக்கு மூன்றாவது பிறந்த நாளை சௌந்தர்யா கேக் வெட்டி கொண்டாடினார். அந்த போட்டோவை சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.
அது என்ன பாட்டீல்: தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது காதல் கணவர் விசாகன் வணங்காமுடியுடன் பப்பில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து, இந்த ஆண்டு எங்களுக்கு வழங்கிய எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. நானும் என் கணவரும் இணைந்து கழித்த ஒரு சிறிய, சிறப்பான தருணத்தை, அன்பு நிறைந்த இதயத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர் லைக்களை 'குவித்து வந்தாலும் சிலர் பின்னாடி என்ன சரக்கு பாட்டீலா? மண்டையில் இருக்கும் கொண்டைய மறந்துட்டீங்களே என கமெண்ட் பாக்ஸ் பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது சௌந்தர்யா, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கான தொடக்க விழா அண்மையில் சென்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த் , அனஸ்வரா ராஜன் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications