அமெரிக்காவிலிருந்து திரும்பிய அப்பாவுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மகள்.. மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி!
சென்னை: அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது மகள் ஹேப்பி நியூஸ் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
தனது மனைவி லதாவுடன் அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்தை ஏற்கனவே அங்கு தங்கியிருந்த அவரது மகள் ஐஸ்வர்யா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவ பரிசோதனை
அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை முடித்துக்கொண்டு வெளியே வந்த போட்டோக்கள் வெளியானது. அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் ட்ரென்ட்டானது.

பாட்ஷா ஸ்டைலில்
தொடர்ந்து அமெரிக்காவில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்தார். அந்த போட்டோக்களும் இணையத்தை திணறடித்தது. இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் ஓய்வெடுத்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9 ஆம் தேதி சென்னை திரும்பினார்.

வீட்டில் விசேஷம்
சென்னை திரும்பிய கையோடு மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் மக்கள் மன்றத்தை கலைக்கும் படியும் கூறினார். இந்நிலையில் ரஜினிகாந்தில் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது.

மீண்டும் தாத்தாவாகும் ரஜினி
அதாவது நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா கர்ப்பமாக உள்ளார். இந்த விஷயம் நடிகர் ரஜினிகாந்துக்கே சென்னை திரும்பிய பிறகுதான் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக போகிறார்.

விவாகரத்து
சவுந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் என்ற மகன் பிறந்த நிலையில் 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இரண்டாவது திருமணம்
மகன் வேத் தனது அம்மா சவுந்தர்யாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சவுந்தர்யாவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தொழிலதிபரான விசாகன், வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
Recommended Video

ரசிகர்கள் வாழ்த்து
இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சவுந்தர்யா தற்போது கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் மீண்டும் தாத்தாவாக போகும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











