ரஜினி மகளுக்கு நடந்த இரண்டாவது திருமணம்.. தாலி கட்டமாட்டேன் என அடம் பிடித்த கணவர்.. ஏன் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். இரண்டாவது மகளான சௌந்தர்யா முதலில் ஒரு திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதனையடுத்து விசாகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் திருமணத்தில் ஒரு மகனையும், இரண்டாவது திருமணத்தில் ஒரு மகனையும் அவர் பெற்றெடுத்தார். இந்நிலையில் திருமணத்தின்போது விசாகன் தாலி கட்டமாட்டேன் என சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். ஆனால் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த அவர்கள்; சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அந்தப் பிரிவுக்கு பலரும் பல காரணங்களை சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்கள் எதுவும் ரியாக்ட் செய்யாமல் தங்களது வழியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம்: இதற்கிடையே ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா முதலில் ஒரு திருமணம் செய்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால் சில காரணங்களால் முதல் கணவரை பிரிந்தார் சௌந்தர்யா. அதனையடுத்து நடிகர் விசாகனை காதலித்து திருமணம் செய்தார். இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடந்தது. முக்கியமாக மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த ரஜினியை பலரும் பாராட்டினார்கள்.

Rajinikanth s Daughter Soundarya Reveals Why Vishagan Delayed the knot During Their Wedding
Photo Credit:

ட்ரெண்டாகும் சௌந்தர்யா பேட்டி: இந்நிலையில் தங்கள் திருமணத்தின்போது நடந்தது பற்றி சௌந்தர்யா பேசிய வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அவர் கொடுத்திருந்த பேட்டியில், "எங்கள் திருமணத்தின் முகூர்த்த நேரம் வந்துவிட்டது. ஆனால் மண்டபத்திலோ எனது மகன் வேத் கிருஷ்ணா இல்லை. உடனே நான் எனது அக்காவிடம் வேத் இன்னும் வரவில்லையா என கேட்டார். அப்போது விசாகன் என்னை பார்த்து, வேத் வரும் வரை நான் தாலி கட்டாமாட்டேன் என சொன்னார். பிறகு வேத் வந்த பிறகுதான் அவர் என் கழுத்தில் தாலி கட்டினார்.

நாங்கள் எல்லோருமே ஒன்றுதான்: ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எல்லோரும் ஒன்றுதான். குழந்தைகளுக்கு எல்லாம் புரியும். அவர்களிடம் பொய் சொல்லவோ, பொய்யாக நடக்கவோ முடியாது. அவர்கள் அதனை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்காள். விசாகன் தன்னை பார்த்துக்கொள்வார் என்று வேத் உணர்ந்தான். அவனுக்கு அந்த உணர்வு கிடைத்தது. வேத் வந்த பிறகு விசாகன் எனது கழுத்தில் தாலி கட்டியதை நான் எப்போதுமே மறக்கமாட்டேன்" என்றார்.

தயாரிப்பாளர் சௌந்தர்யா: சௌந்தர்யாவின் கரியரை பொறுத்தவரை படங்களின் டைட்டில் டிசைன் செய்துகொண்டிருந்தார். அதனையடுத்து கோவா படத்தை தயாரித்தார். ஆனால் அது சரியாக போகவில்லை. தொடர்ந்து கோச்சடையான், விஐபி 2 ஆகிய படங்களை இயக்கவும் செய்தார். அவையும் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் சில காலம் பிரேக் எடுத்த அவர் இப்போது மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளியான வித் லவ் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X