‘கூலி‘ படம் பற்றி பேச விரும்பல.. லோகேஷ் நல்ல இயக்குநர் தான்.. ஆனால், ரஜினி மகள் பேட்டி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள திரைப்படம் 'வித் லவ்'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கி உள்ளார். இதில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை குட் நைட் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சீயோன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

சீயோன் நிறுவனத்தின் உரிமையாளரான சௌந்தர்யா, 'வித் லவ்' படம் குறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்து வருகிறார். அப்போது, விமர்சகர் பரத்வாஜ், எனக்கு லோகேஜ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அது பிடித்திருக்கிறது என்று சொன்னதற்காக நான் விமர்சிக்கப்பட்டேன். உங்களுக்கு கூலி படம் பிடித்திருந்ததா என சௌந்தர்யாவிடம் கேள்வி எழுப்பினார்.

Rajinikanth Soundarya interview
Photo Credit:

சௌந்தர்யா ரஜினிகாந்த்: அதற்கு பதில் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், டீ-ஏஜிங் செய்யப்பட்ட கடைசி 10 நிமிடங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், தலைவர் ரஜினிகாந்தின் ரசிகையாக, நான் அவரை இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்பினேன். எனக்குப் படம் பிடித்திருந்தது. ஆனால், இது அப்பாவின் சிறந்த படங்களின் பட்டியலில் இல்லை. என் கருத்துப்படி, இந்த நாட்களில் மக்கள் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை. லோகேஷ் கனகராஜ் பல நல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதால், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் 'கூலி' படம் பற்றி நான் மேலும் விரிவாகப் பேச விரும்பவில்லை என பதில் அளித்துள்ளார்.

6ந் தேதி ரிலீஸ்: 'லவ் வித்' திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில், இதன் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக ரஜினிகாந்த் சத்யம் திரையரங்கில் படம் பார்த்தார். இப்படம் 6ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ஓபனிங்கே மிகப்பெரிய கலெக்‌ஷன் அள்ளும் என்றும் டிக்கெட் புக்கிங் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X