முருகா காப்பாத்துப்பா... திருச்செந்தூரில் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட ரஜினி மகள்

திருச்செந்தூர் : இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து, சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினி. தனது ஸ்டைலால் குழந்தைகள், பெரியவர்கள், வெளிநாட்டினர் என அனைவரையும் வசீகரித்து வைத்துள்ளார் ரஜினி.

சமீபத்தில் தனது அண்ணாத்த பட வேலைகளை முடித்துள்ள ரஜினி, சத்தமில்லாமல் தலைவர் 169 பட வேலைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் 169 படத்தின் கதை, டைரக்டரை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.

ரஜினியின் இரு மகள்களும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே தங்களின் திறமைகளை நிரூபித்து விட்டார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தையும், இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தையும் இயக்கி வெற்றி கண்டவர்கள். அதிலும் செளந்தர்யா, ரஜினி நடித்த சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

இவர் தொழிலதிபரும் நடிகருமான விசாகன் வணங்காமுடியை 2019 ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். செளந்தர்யாவிற்கு ஏற்கனவே வேத் என்ற மகன் இருக்கும் நிலையில், தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தான் இந்த தகவலை அறிவித்தனர்.

Rajinikanths daughter pregnant soundarya visit famous thiruchendur temple

அண்ணாத்த ஷுட்டிங்கை முடித்து விட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய ரஜினிக்கு, தான் மீண்டும் தாத்தா ஆக போகிறோம் என்ற தகவல் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் செளந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் நேற்று, புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மிக எளிமையாக பாரம்பரிய உடையில் வந்த இந்த தம்பதியினர் அங்கு சிறப்பு பூஜை செய்து, முருகப் பெருமானை வழிபட்டுள்ளனர்.

இவர்கள் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி, வைரலாகி வருகின்றன. செளந்தர்யா, கர்ப்பத்தை அறிவித்த பிறகு பொது இடத்தில் காணப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X