லதா ரஜினி, சவுந்தர்யா, ஐஸ்வர்யா தனுஷ்.... தர்பார் சிறப்புக் காட்சியில் ரசிகர்களுடன் ரஜினி குடும்பம்
Recommended Video
சென்னை: தர்பார் படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினிகாந்த் குடும்பத்தினர் ரசிகர்களுடன் பார்த்துவருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், தர்பார். இதில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

போலீஸ் கமிஷனர்
படம்பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, இது மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. இதில் ரஜினி அரசியல் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார்.

பட்டாசு வெடித்து
இந்நிலையில் தர்பார் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் பாலாபிஷேகம் செய்தும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பு காட்சி
படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ரோகிணி தியேட்டரில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வந்தனர்.

லதா ரஜினி
ரஜினியின் மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷின் மகன்கள் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் படம் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











