இன்டர்நேஷனல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லொள்ளு சபா ஜீவா
சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொள்ளு சபா நடிகர் ஜீவாஇ ரஜினிகாந்த் பற்றி குறிப்பிடும்போது, யார் மனதையும் புண்படுத்தாதவர், நல்ல பண்புகளை கொண்டவர், உழைத்து முன்னேறுவது தான் உண்மையான வெற்றி என்பவர் தலைவர். ரஜினியின் ரசிகன் என்றால் உழைப்பின் ரசிகன். அப்படிப்பட்ட மனிதரை பின்பற்றி அவரின் ரசிகன் என்று மிகவும் பெருமையாக நாம் சொல்லி கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று நம்ம தமிழ் சினிமாவில் தனது தனித்துவம் வாய்ந்த நக்கலான நகைச்சுவையால் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே தன் பின்னால் சுமந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். ஒரு நகைச்சுவை நடிகனாக தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று ஹீரோ, தயாரிப்பாளர் என பன்முகங்களோடு வலம் வருபவர்.

அவர் சினிமா துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க ஒளிபரப்பட்ட லொள்ளு சபா நகைச்சுவை தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். இது திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் நக்கல், நையாண்டி செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சி. அந்த நகைச்சுவை தொடரில் அவருடன் ஸ்வாமிநாதன், ஜீவா, மனோகர், ஜாங்கிரி மதுமிதா என பலர் இணைந்து நடித்தனர்.
அதில் ஒரு நடிகரான ஜீவா, நடிகர் சந்தானத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்தி வந்தனர். ஜீவா குருவி, கண்டேன் காதலை, மதராசபட்டினம், இது என்ன மாயம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் மீது, அவருக்கு இருக்கும் ஈர்ப்பு குறித்த தகவல்களை பகிர்ந்தார்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் சினிமேக்ஸ் எனும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள் பல பிரபலங்கள். தலைவரை நேசிக்கக்கூடியவர்கள், அவரை பற்றின பாசிட்டிவ் விஷயங்கள், ரசித்த விஷயங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா தனது தலைவனிடம் அவருக்கு பிடித்த சில விஷயங்கள் பற்றி பகிர்ந்தார்.
சூப்பர் ஸ்டார் என இன்று நாம் அவரை கொண்டாடுவதற்கு பின்னால் அவரின் 45 ஆண்டு கால கடுமையான உழைப்பு, மற்றும் திரை வாழ்விற்கு வருவதற்கு முன்னர் அவர் சந்தித்த போராட்டங்கள் இவை அனைத்தையும் தாண்டி அவரின் விடா முயற்சி தான் அவரை இந்த இடத்திற்கு உயர்த்தியுள்ளது. உழைப்பு தான் ஒரு மனிதனை உயரத்திற்கு கொண்டுபோகும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
அவரது சாம்ராஜ்யம் இந்தியாவில் மட்டுமல்ல சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் 2.௦ திரைப்படத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தர்பார் வெளியானதற்கு பிறகு இன்டர்நேஷனல் சூப்பர் ஸ்டாராக அவர் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ரஜினி ரசிகன் நான் என்று நாம் சொல்லி கொள்வதே நமக்கு மிகப் பெரிய பெருமை.
யார் மனதையும் புண்படுத்தாதவர், அவதூறாக பேசியதில்லை, நல்லதை மட்டுமே அடுத்தவர்களுக்கு சொல்பவர், யாரையும் குறை கூறாதவர், நல்ல பண்புகளை கொண்டவர், உழைத்து முன்னேறுவது தான் உண்மையான வெற்றி என்பவர் தலைவர். ரஜினியின் ரசிகன் என்றால் உழைப்பின் ரசிகன். அப்படிப்பட்ட மனிதரை பின்பற்றி அவரின் ரசிகன் என்று மிகவும் பெருமையாக நாம் சொல்லி கொள்ளலாம்.
உண்மையில் அவரை விடவும் திறமையான மனிதர்கள், நடிகர்கள் திரையுலகில் பலர் இருந்தாலும் என்றுமே முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் தான் இருக்கிறார் என்பதற்கு முக்கிய காரணம் அவரின் தனித்துவம். அவரது உயர்ந்த சிந்தனைகள், தொழில் பக்தி, நல்ல பண்புகள் தான் என்று மிகவும் பெருமையாக தனது தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசினார் நடிகர் ஜீவா.


Click it and Unblock the Notifications











