twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உண்மை பேச என்றுமே தயங்கியதில்லை.. ஏன் இந்த முடிவை எடுத்தார்? இதுதான் ரஜினியின் முழு அறிக்கை!

    By
    |

    சென்னை: நான் உண்மை பேச தயங்கியதில்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த், இந்த முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

    என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு!

    இந்நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்நிலையில் தான் கட்சி தொடங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    மிகவும் ஜாக்கிரதை

    மிகவும் ஜாக்கிரதை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு முழு அறிக்கை விவரம்: ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கலந்துகொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக் கவசம் அணிந்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

    மாற்று சிறுநீரகம்

    மாற்று சிறுநீரகம்

    இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. எனக்கு கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்தது. ஆனால் என் ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனது ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது, அது என் மாற்று சிறுநீரகத்தை கடுமையாகப் பாதிக்கும்.

    எச்சரிக்கையாக பார்க்கிறேன்

    எச்சரிக்கையாக பார்க்கிறேன்

    அதனால், மருத்துவர்கள் அறிவுரைப்படி கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன், நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்தால், மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள்.

    இரண்டாவது அலை

    இரண்டாவது அலை

    நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி பிரசாரத்துக்கு சென்று ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட சூழலிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான், 3 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துகொண்டிருக்கிறது.

    உடல்நிலை பாதிப்பு

    உடல்நிலை பாதிப்பு

    தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான் இந்த கொரோனா காலத்தில் பிரசாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள், பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

    கொடுத்த வாக்கு

    கொடுத்த வாக்கு

    என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். அரசியலுக்கு வருவேன் என்று சொல்லு இப்போது வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

    என்னை மன்னியுங்கள்

    என்னை மன்னியுங்கள்

    ஆகையால் நான் கட்சி ஆர்மபித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னியுங்கள்.

    வீண் போகாது

    வீண் போகாது

    எங்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள். அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்.

    எங்களுக்கு முக்கியம்

    எங்களுக்கு முக்கியம்

    ரஜினி மக்கள் மன்றம் வழக்கம் போல செயல்படும். மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்த, நீங்கள் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள். அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தயங்கியதில்லை

    தயங்கியதில்லை

    நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு பெரிய அரசியல் கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்னுடன் வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜுன மூர்த்திக்கும் நன்றி. தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன். நான் உண்மை பேச என்றுமே தயங்கியதில்லை.

    ஏற்க வேண்டும்

    ஏற்க வேண்டும்

    என் நலத்தில், அக்கறையுள்ள, என் மேல் அன்புகொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Recommended Video

    ரஜினி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத கமல்? காரணம் இதுதானா? டாப் 5 பீட்ஸ் - வீடியோ

    English summary
    Rajinikanth's full statement about his Political issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X