வின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்!
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் மிக முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை: இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் மிக முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் கடந்த மாதம் வெளியானது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை. படத்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் புகார் வைத்து இருந்தனர்.

அடுத்த படம்
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். வரிசையாக அஜித் உடன் 4 படங்களை சிவா இயக்கினார். இவர் சூர்யாவுடன் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது ரஜினியுடன் இணைந்துள்ளார். ரஜினியிடம் சிவா இரண்டு கதைகளை கூறினார். இதில் ரஜினி ஒரு கதைக்கு ஓகே சொன்னார்.

ஷூட்டிங் என்ன
அதன்பின் தற்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தை மையமாக வைத்த கதையாக இது தயார் ஆகி வருகிறது. அண்ணாத்த கதை அரசியல் சார்ந்து இருக்கும். தமிழக அரசியலை மையமாக வைத்து படம் இருக்கும். தேர்தல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள், என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வின்டேஜ் ரஜினி
அண்ணாத்த படத்திற்காக ரஜினி பெரிய முறுக்கு மீசை வைக்க இருக்கிறார். அண்ணாத்த என்று பெயருக்கு ஏற்றபடி, லோக்கல் லுக்கில் ரஜினி மாஸ் காட்டுவார் என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் கண்டிப்பாக முரட்டுக்காளை வின்டேஜ் ரஜினியை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஆனால் வில்லன்
ஆனால் இந்த படத்தின் வில்லன் பிரகாஷ்ராஜ் கிடையாது. அண்ணாத்த படத்தில் பாலிவுட் ஹீரோ ஒருவர்தான் வில்லனாக நடிக்கிறார். ஆனால் இதை படக்குழு இன்னும் ரகசியமாக வைத்து இருக்கிறது. வில்லன் குறித்த அறிவிப்பை பிறகு வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அஜித் கதை
இந்த படத்தின் கதையை நடிகர் அஜித்திடம் ஏற்கனவே சிவா கூறி இருக்கிறார். ஆனால் அஜித் விவேகம் கதையை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்த கதையை சிவா பெரிய ஹீரோவிற்காக வைத்து இருந்தார். தற்போது அவரின் விருப்படியே அதை இன்னொரு பெரிய ஹீரோவான ரஜினிக்கு கூறி உள்ளார். இந்த படம் வேகமாக தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











