அண்ணாத்த ஆன் டிஸ்கவரி.. பியர் கிரில்ஸ் உடன் ரஜினி.. எப்போ ஒளிபரப்பாகப் போகுது தெரியுமா?

சென்னை: பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Into The Wild நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Rajinikanth in Man vs Wild | Thalaiva on Discovery | Into the wild motion poster

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். உலகளவில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று சாகசங்களை நிகழ்த்தும், Into The Wild எனும் புதிய நிகழ்ச்சியை தற்போது நடத்தி வருகிறார்.

இந்திய பிரதமர் மோடியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Into The Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப்பட டீசர் போல, அட்டகாசமாக, Into The Wild டீசரை பியர் கிரில்ஸ் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கி உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள அந்த நிகழ்ச்சி குறித்த டீசரை பார்த்த ரஜினி ரசிகர்கள், ட்விட்டரில் #ThalaivaOnDiscovery என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரொம்ப ஸ்பெஷல்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, ஹாலிவுட் நடிகர்கள் சானிங் டாட்டம், பிரை லார்சன் உள்ளிட்ட பலருடன் இது போன்ற சாகச நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பங்கேற்றுள்ள இந்த ஒரு நிகழ்ச்சி, தனக்கு ரொம்ப ஸ்பெஷல் என பியர் கிரில்ஸ் குறிப்பிட்டதை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மரண மாஸ்

ரஜினிகாந்தின் படங்களை விட மிகப் பெரிய ஓபனிங் மற்றும் வரவேற்பு உலகளவில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் என்றும், மார்ச் 23ம் தேதி டிஸ்கவரி சேனலின், டி.ஆர்.பி ரேட்டிங் வேற லெவலில் எகிறப் போகிறது என்றும், ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புரமோவே தெறிக்குது

டெர்ட் பைக்கில், ஹெல்மட் மற்றும் கூலர்ஸ் மாட்டியபடி, ரஜினிகாந்த், பறக்கும் காட்சிகள், டீசரில் நெருப்பாக தெறிக்கிறது என்றும் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக நிகழ்ச்சி முழுவதும் இருக்கப் போகிறது என்றும், ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட்டுகள் மற்றும் மீம்களை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அண்ணாத்த ஆன் டிஸ்கவரி

இதுவரை எந்தவொரு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த், முதன்முறையாக டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ள Into The Wild நிகழ்ச்சியில், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து செய்யும் சாகசங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அண்ணாத்த ஆன் டிஸ்கவரி என ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X