தீபாவளி ரேஸில் ஜெயிலர் VS இந்தியன் 2... 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி - கமல்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அதேபோல் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் கமல்.

இந்த இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி எப்போது என எதிர்பார்த்துள்ள ரசிகர்களுக்கு தரமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

முக்கியமாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - கமலின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இறுதியாக ரஜினியின் சந்திரமுகியும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஜெயிலர்

ரஜினியின் ஜெயிலர்

அண்ணாத்த படத்திற்கு பின்னர் ரஜினி தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருவதை அறிவித்த படக்குழு, மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஆகியோரும் ஜெயிலரில் நடிப்பதை உறுதி செய்தது. மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாவதால் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேகமாக படப்பிடிப்பு நடந்து வரும் ஜெயிலர் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரிலீஸ் ஒத்திவைப்பு?

ரிலீஸ் ஒத்திவைப்பு?

ஆனால், அதற்குள் படப்பிடிப்பும் போஸ்ட் புரோடக்‌ஷனும் முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வெளியாவதால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி விநாயகர் சதுர்த்தியில் வெளியாகலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் இல்லை தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் அண்ணாத்த படமும் 2021 தீபாவளி தினத்தில் தான் வெளியானது.

கமலின் இந்தியன் 2

கமலின் இந்தியன் 2

இதனிடையே கமலின் இந்தியன் 2 திரைப்படமும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கிடப்பில் இருந்த இந்தியன் 2, விக்ரம் படத்தின் ப்ளாக்ஸ் பஸ்டர் ஹிட்டால் உயிர்ப் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷங்கர் இன்னொரு பக்கம் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். அதனால் இந்தியன் 2 ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் VS இந்தியன் 2

ஜெயிலர் VS இந்தியன் 2

அதன்படி கமலின் இந்தியன் 2 திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். கமலின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம், இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து அசத்தியது. அதனால் இந்தியன் 2 தீபாவளி ரிலீஸாக இருந்தால் அது ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும். ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் இந்தியன் 2வும் களமிறங்கினால், பாக்ஸ் ஆபிஸில் இன்னும் தரமான சம்பவம் அரங்கேறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 67 - ஏகே 62?

தளபதி 67 - ஏகே 62?

இந்தாண்டு தொடக்கமே விஜய்யின் வாரிசு - அஜித்தின் துணிவு என பொங்கல் ரிலீஸாக களமிறங்கி பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்தன. இப்போது தீபாவளி ரேஸில் ஜெயிலர், இந்தியன் 2 இணையலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய்யின் தளபதி 67, அஜித்தின் ஏகே 62 படங்களும் தீபாவளி ரிலீஸை குறிவைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X