Jailer: ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள் மும்முரம்.. ரஜினி எப்ப ஜாயின் ஆகிறார் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அடுத்த மாதத்தில் படத்தின் பிரமோஷன்கள், இசை வெளியீடு ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் ரஜினிக்கு டூயட் பாடல்கள் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மொத்தமாக இரு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும் தீம் ட்ராக்ஸ் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு பாடலுக்கு தமன்னா சூப்பர் ஆட்டம் போட்டுள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி, வித்தியாசமான ஸ்டெப்சை போட்டுள்ளாராம்.
படத்தின் சூட்டிங் கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி ரஜினி, தமன்னா உள்ளிட்டவர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. முன்னதாக ரஜினியின் அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விரைவில் ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் தன்னுடைய டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்தில் ரஜினியின் கேரக்டர் கெட்டப் குறித்த இந்த வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்யவுள்ள ரஜினிகாந்த், அடுத்த வாரத்தில் ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











