காலா ஸ்பெஷல் எமோஜி... 4 மொழிகளில் வெளியிட்ட டிவிட்டர்!

காலா படத்திற்கென நான்கு மொழிகளில் டிவிட்டர் சிறப்பு எமோஜி வெளியிட்டுள்ளது.

சென்னை: ரஜினியின் காலா பட ரிலீசையொட்டி நான்கு மொழிகளில் சிறப்பு எமோஜியை டிவிட்டர் அறிமுகம் செய்துள்ளது.

வுண்டர் பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரிக்கும் படம் 'காலா'. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 7ம் தேதி (ஜூன் 7) திரைக்கு வருகிறது. ரஜினியின் அரசியல் என்ட்ரியைத் தொடர்ந்து காலா படம் வெளிவர உள்ளதால், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanths Kaala gets its own Twitter emoji

காலா படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும், வுண்டர்பார் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், காலா படத்துக்கென சிறப்பு எமோஜியை டிவிட்டர் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் #காலா ஹாஷ்டேக்குகளில் ரஜினியின் உருவத்துடன் இந்த சிறப்பு எமோஜிகான் உள்ளது.

இதன் மூலம் டிவிட்டரில் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த ஹாஷ்டேக் மற்றும் எமோஜியை பயன்படுத்தி, காலா படம் குறித்த தங்கள் கருத்துக்களை பகிரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழில் விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு டிவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X