வெளியானது ரஜினியின் காலா டீசர்... யூட்யூபையே அதிர வைக்கும் ரெஸ்பான்ஸ்! #KaalaTeaser
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காலா.. கரிகாலன் படத்தின் டீசர் இன்று வெளியானது.
கபாலியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்த காலா டீசருக்கு யுட்யூபில் வரவேற்பு கிடைத்துள்ளது.
பா ரஞ்சித்தும் ரஜினியும் கபாலி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்த படம் காலா. அதிரடி அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக காலா உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உலகெங்கும் 10000 அரங்குகளில் வெளியாகிறது.

காலா படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. ஆனால் அன்றைய தினம் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மரணம் காரணமாக டீசர் வெளியீடு 24 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.
இன்று அதிகாலை காலா டீசரை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் யுட்யூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களில் யுட்யூப் தளமே முடங்கும் அளவுக்கு அதிரடியாக ரசிகர்கள் காலாவை வரவேற்றுக் கொண்டாடினர். காலை 10 மணிக்குத்தான் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு, முன்கூட்டியே வெளியானது தெரிந்ததும், இணைத்தை மொய்க்க ஆரம்பித்தனர்.
சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் காலா டீசர் மற்றும் அந்த டீசரில் வரும் ரஜினியின் புகைப்படங்களுமே வைரலாக வலம் வருகின்றன. ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் காலா டீசர்தான் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











