லைகா படத்துக்கு இப்படியா ரெஸ்பான்ஸ்? சர்வதேச விழாவில் ‘லால் சலாம்‘ சாதனை!

சென்னை: உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) இன்று இந்திய சினிமாவுக்கு ஒரு பெருமைமிகு தருணத்தை வழங்கியது. லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய "லால் சலாம்" திரைப்படம் சிறப்புத் திரையிடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு, பெருமையுடன் திரையிடப்பட்டது.

திரைப்படத் துறையின் சர்வதேச தரமான படைப்புகள் மட்டுமே இந்தப் பிரிவில் இடம் பெறுவது வழக்கம். அதில் "லால் சலாம்" தேர்வு செய்யப்பட்டிருப்பது, தொழில்நுட்பமான தரம், கதைக்கள வலிமை மற்றும் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டதற்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட இந்தியா மற்றும் உலக திரைப்பட துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Rajinikanth IFFI 2025 Lal Salaam

லால்சலாம்: ரஜினிகாந்தின் சர்வதேச புகழ், கதையின் உலகளாவிய அணுகுமுறை, தொழில்நுட்ப நுணுக்கம் என்று அனைத்தும் ஒன்றிணைந்த லால் சலாம் திரைப்படம் IFFI மேடையில் திரையிடப்பட்ட தருணம், தமிழ் சினிமாவினருக்கே ஒரு பெருமை என திரையுலக வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், லைகா புரொடக்ஷன்ஸின் மற்றொரு எதிர்பார்க்கப்படும் படைப்பு "லாக்டவுன்", வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அதுவும் IFFI மேடையில் சிறப்புத் திரையிடலுக்காக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லைகா நிறுவனம் ஒரே பதிப்பில் இரண்டு படங்களை இந்த சர்வதேச விழாவில் கெளரவமாகப் பெற்ற பெருமையைச் சேர்த்துள்ளது.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், லிவிங்ஸ்டன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் லால் சலாம். கிட்டத்தட்ட 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X