twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த் படங்களில் பெண்களை தப்பா காட்டி இருக்காங்க...என்ன இப்படி சொல்லிட்டாரு ஆர்.ஜே.பாலாஜி!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா மற்றும் மன்னன் உள்ளிட்ட படங்கள் பெண்களை இழிவாக காட்டியதாக ஆர்.ஜே. பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட் படமான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் படத்ஹை இயக்கி நடித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

    தனியார் கல்லூரியில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி பேசியிருப்பது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

     ஏழை குழந்தைகளின் படிப்பில் அக்கறை காட்டிய விஜய், சிம்பு... ராகவா லாரன்ஸ் சொன்ன தகவல்! ஏழை குழந்தைகளின் படிப்பில் அக்கறை காட்டிய விஜய், சிம்பு... ராகவா லாரன்ஸ் சொன்ன தகவல்!

    காமெடியன் டு ஹீரோ

    காமெடியன் டு ஹீரோ

    ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த ஆர்ஜே பாலாஜி நானும் ரவுடி தான் படத்தில் காமெடியனாக கலக்கி இருப்பார். எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக மாறிய ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள வீட்ல விசேஷம் படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

    வீட்ல விசேஷம்

    வீட்ல விசேஷம்

    இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். பிங்க் படத்தை நேர்கொண்ட பார்வை என்றும், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கள் 15 படத்தை நெஞ்சுக்கு நீதி என தயாரித்துள்ள அவர் அடுத்தபடியாக பதாய் ஹோ படத்தை வீட்ல விசேஷம் என்கிற டைட்டிலில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஆர்ஜே பாலாஜி பேச்சு

    வீட்ல விசேஷம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை தனியார் கல்லூரி ஒன்றில் நடத்தி உள்ளனர். அதில், கலந்து கொண்டு பேசிய ஆர்.ஜே. பாலாஜியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெண்களை எந்தளவுக்கு தவறாக சித்தரித்துள்ளனர் என்பதை மேடையில் ஆர்ஜே பாலாஜி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

    ரஜினி படங்களில்

    ரஜினி படங்களில்

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த மன்னன் மற்றும் படையப்பா உள்ளிட்ட படங்களில் பெண்களை ரொம்பவும் தப்பா காட்டியது தான் பசங்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூகத்தில் மிகப்பெரிய வேற்றுமை உருவாகக் காரணமே என நடிகர் ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார். படையப்பா படத்தில் வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ, வெளிநாட்டுல படிச்சிட்டு வர பொண்ணு கெட்டவன்னு காட்டிருப்பாங்க, மன்னன் படத்தில் படிச்சுட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்கிற குஷ்பு நல்லவங்களா காட்டியிருப்பாங்கன்னு பேசியுள்ளார்.

    நேர்கொண்ட பார்வையை பாராட்டி

    நேர்கொண்ட பார்வையை பாராட்டி

    அதே நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை படத்தை பாராட்டியும் ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார். இந்த படத்தை தமிழ் ஆடியன்ஸ் எப்படி ஏத்துப்பாங்கன்னு விமர்சகர் ஒருவர் சொன்னது தனக்கு ரொம்பவே வருத்தமாகிடுச்சு, பார்ட்டிக்கு போற பெண்கள் தப்பானவங்கன்னு ஜட்ஜ் பண்ண நாம யாருன்னு கேட்கிற படம் தான் அது என அஜித் படத்தை பாராட்டி பேசும் போது, ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது.

    சரி சமம்

    சரி சமம்

    ஆணும் பெண்ணும் சமம் என்கிற கருத்தையும் பள்ளி, கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது என பிரித்து வைப்பது தவறு என்கிற கருத்தை முன் வைத்து பேசும் போது, படையப்பா மற்றும் மன்னன் படங்களை உதாரணமாகக் கொண்டு ஆர்ஜே பாலாஜி பேசியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நீங்க பேசலையா

    நீங்க பேசலையா

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தில் பக்கத்தில் இருக்குற ஆன்டியை அமுக்கவும் என பெண்களுக்கு எதிரான வசனத்தை நீங்க பேசலையா ஆர்.ஜே. பாலாஜி என்றும் எல்கேஜி படத்தில் ஜே.கே. ரித்திஷை பெண்ணுடன் ஒப்பிட்டு இழிவுப்படுத்தும் காட்சிகளை ஏன் வைத்தீர்கள் என்றும் ரஜினி ரசிகர்கள் விளாசி வருகின்றனர். மன்னன் படத்தில் குஷ்புவும் வேலை பார்க்கும் பெண் தான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அகம்பாவம் கூடாது என்பதை தான் உணர்த்த இயக்குநர் முயற்சித்திருப்பார் என்றும் விளாசி வருகின்றனர்.

    English summary
    RJ Balaji celebrates his Veetla Visesham pre release function at private college and speaks, Rajinikanth’s Mannan and Padayappa portrays women in a wrong way shocks Rajinikanth fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X