'ஒரே ஒரு பாட்ஷா' ரஜினியின் வெறித்தன டயலாக்ஸ்..! #HBDSuperstar

By Vignesh Selvaraj

Recommended Video

ரஜினியின் வெறித்தன டயலாக்ஸ்..வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 68-வது பிறந்தநாள் இன்று. ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் எனும் ஆளுமையை ரசிகர்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அவரது ஸ்டைலும், பேசும் மாஸ் பஞ்ச் வசனங்களும் தான்.

திரைப்படங்களில் ரஜினி பேசிய வசனங்கள் பலருக்கு நம்பிக்கை வாசகங்கள். ரஜினியின் ஸ்பெஷல் மாஸ் டயலாக்குகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். உங்களுக்குப் பிடித்த வசனங்களை கமென்ட்டில் குறிப்பிடலாம்...

நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி!

நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி!

1995-ல் வெளியான 'பாட்ஷா' படத்தில் ரஜினி பேசும் மாஸ் டயலாக் இது. எதிரிகளையும், துரோகிகளையும் எச்சரிப்பதற்காகச் சொன்ன அந்த வசனம் சின்னக் குழந்தைகள் வரை பிரபலம்.

கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது!

கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது!

'அருணாசலம்' படத்தில் சூப்பர்ஸ்டார் சொல்லும் வசனம் இது. விரைவான வெற்றிக்கு குறுக்கு வழி தேடுபவர்களுக்கு அறிவுரையை இதுக்கு மேல் எளிமையா எப்படிச் சொல்றது?

சொல்றதைத்தான் செய்வேன்... செய்றதைத்தான் சொல்வேன்

சொல்றதைத்தான் செய்வேன்... செய்றதைத்தான் சொல்வேன்

குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் கடந்த தேர்தல்களின் போது தி.மு.க-வின் பிரச்சார முழக்கங்களாகவே மாறியதை யாரும் மறந்திருக்க முடியாது.

நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்..!

நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்..!

1992-ல் வெளியான 'அண்ணாமலை' படத்தில் ரஜினி பேசும் வசனம் இது. செய்யாத சத்தியத்தையும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்கிற பொருளில் சொல்லப்பட்ட இந்த வசனமும் கடந்த காலத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான்... ஆனா கடைசியில கைவிட்டுடுவான்!

கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான்... ஆனா கடைசியில கைவிட்டுடுவான்!

'பாட்ஷா' படத்தில் ரஜினி பேசும் வெறித்தன டயலாக் இது. பலரும் தோல்விகளின் போது உச்சரிக்கும் நம்பிக்கை மந்திரமாக இன்றளவும் இருக்கிறது இந்த வசனம்.

ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்!

ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்!

'முத்து' படத்தில் சூப்பர்ஸ்டார் பேசிய டயலாக் இது. அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது இன்னும் வெறியேற்றிய டயலாக்.

இது எப்டி இருக்கு

இது எப்டி இருக்கு

பரட்டையாக ரஜினி நடித்த '16 வயதினிலே' படத்தில் பேசும் வசனம் இது. அந்தப் படத்தில் அவரது ஃபேவரிட் வசனமான இது பல காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல...

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல...

'சிவாஜி' படத்தில் இப்படி வெறித்தன டயலாக் பேசி அதிரவைப்பதெல்லாம் ரஜினிக்கு மட்டுமே சாத்தியம். ரஜினி என்னும் ஆளுமைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ரஜினிகாங்த் பேசிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்ததை கமென்ட்டில் பதிவு செய்யலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X