ஆட்டத்தை விட்டு வெளியேறிய விஜய்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய ரஜினிகாந்த் சம்பளம்.. இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரே திரையில் தோன்றவுள்ளனர். 'தலைவர் 174' மற்றும் 'KH 238' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தற்போது கோலிவுட்டையே அதிரவைத்துள்ளன.

இந்நிலையில், தனது 174வது படத்திற்காக ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் வாங்கும் அதிகப்படியான சம்பளம் என்கின்றனர். 200 கோடி சம்பளத்தை முதலில் விஜய் தொட்ட நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளமும் 200 கோடியை கடந்துள்ளது.

Rajinikanth s Massive Salary for Thalaivar 174 With Kamal Haasan Highest Ever in Tamil Cinema

ஜன நாயகன் படத்துடன் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற நிலையில், மோசமான விமர்சனங்களை சந்தித்த கூலி படத்தின் மூலமே 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஈட்டிய ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி படம் என பெரிய லைன் அப் உள்ள நிலையில், அவரும் கமலும் இணையும் படத்துக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்திய சினிமாவையே அதிரவைக்கும் சம்பளம்:

'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்திற்காக ரஜினிகாந்திற்கு சுமார் ரூ. 225 கோடி சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச ஊதியமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விண்டேஜ் ஸ்டைலில் ரஜினி - கமல்:

இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ (Promo Video) சமீபத்தில் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 80-களின் விண்டேஜ் ஸ்டைலில் தோன்றுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இதற்காக ரஜினிகாந்த் தனது தோற்றத்தை (Look) மாற்றி, விண்டேஜ் ரஜினியாகத் தயாராகிவிட்டார் என்பது ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

Rajinikanth s Massive Salary for Thalaivar 174 With Kamal Haasan Highest Ever in Tamil Cinema

பிரம்மாண்ட கூட்டணி:

இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தயாரிப்புப் பணிகளைக் கவனிக்கவுள்ளனர். ஏற்கனவே கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மெகா கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது.

சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அந்தத் தருணத்திற்காகத் திரையுலகமே காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X