Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்த குதிரை ஓடிட்டே இருக்கும்.. தலைவர் 169 மட்டுமில்ல தலைவர் 174 வரை மாஸ் பிளான் போட்ட ரஜினி!
சென்னை: அண்ணாத்த தான் கடைசி படம் இதற்கு மேல் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவே மாட்டார் என பேச்சுக்கள் எழுந்த நிலையில், உடனடியாக நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், மேலும், 4 படங்களில் அடுத்தடுத்து நடித்துத் தள்ள தீர்மானித்துள்ளார் ரஜினி என்கிற படு சீக்ரெட்டான தகவல்கள் கசிந்துள்ளன.
அதற்காகத் தான் அத்தனை இயக்குநர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் வம்பிழுத்த ப்ளூசட்டை மாறன்...வச்சு செய்யும் அஜித்தியன்ஸ்

யானை அல்ல குதிரை
தான் யானை அல்ல விழுந்ததும் எழுவதற்கு சிரமப்பட. குதிரை டக்குன்னு எந்திரிச்சுடுவேன் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தே தன்னைப் பற்றி கூறியுள்ளார். உடல்நிலையில் எத்தனை குறைகள் வந்தாலும், அதனை சட்டென சரி செய்து விட்டு படத்தை முடித்துக் கொடுத்து அடுத்த பட வேலைகளில் பிசியாகி விடுகிறார்.

பல தடைகளை தாண்டி
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை எடுக்க திடீரென சென்று விட்ட நிலையில், அண்ணாத்த படமே முழுதாக முடிந்து வெளியாகுமா? என ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டன. மேலும், படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா பரவ படப்பிடிப்பே நிறுத்தப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், பல தடைகளை கடந்து அந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

நெல்சன் இயக்கத்தில்
ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் படம் பண்ணப் போகிறார் என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதற்கு பதிலாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தலைவர் 169 படம் உருவாகப் போகிறது என்கிற செம மாஸ் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.

தலைவர் 170
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற தகவல்களும் வெளியான நிலையில், ரஜினிகாந்தின் 170வது படத்தை வெற்றிமாறன் தான் இயக்கப் போகிறார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் உறுதியான தகவல்களை கூறியுள்ளன. 170வது படம் மட்டுமல்ல 171, 172, 173 மற்றும் 174 என அடுத்த 5 படங்களுக்குமான மாஸ் பிளானை நடிகர் ரஜினிகாந்த் போட்டுள்ளாராம்.

மீண்டும் சிவா
இதில், பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் முடிவில் உள்ளதாகவும், அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் அருண்ராஜா காமராஜ் அல்லது பாண்டியராஜ் ஒரு படத்தை இயக்குவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஷங்கர் இயக்கத்திலும்
மேலும், ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிவாஜி, எந்திரன், 2.0 படங்களை இயக்கிய இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஒவ்வொரு படத்துக்கும் 40 நாட்கள் கால்ஷீட்டில் நடிக்க முடிவு செய்துள்ள ரஜினிகாந்த், ஷங்கர் படத்துக்கு மட்டும் கூடுதல் கால்ஷீட் ஒதுக்குவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், ஒவ்வொரு படத்தையும் முடித்த பின்னர் தான் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.