Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் இணையும் ரஜினி - சன்பிக்ஸர்ஸ்! தலைவர் 168 படத்தை இயக்கப்போவது இவர்தான்! #Thalaivar168
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவாதான் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்தப்படத்தின் போட்டோக்கள் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் சிறுத்தை சிவா, அண்மையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தார்.

ஆஷ்ரம் பள்ளி விழா
அப்போதே ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது இயக்குநர் சிவாதான் என அரசல் புரசலாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து விஜயதசமி நாளில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இயக்குநர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தலைவரின் அடுத்தப்படம்
இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாயின. இதனை தொடர்ந்து அந்த போட்டோக்களை வைரலாக்கிய ரஜினி ரசிகர்கள், தலைவரின் அடுத்த படம் இவருக்குதான் என டிவிட்டி வந்தனர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படமான 168வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் 168வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
|
இயக்குநர் சிவா
எந்திரன், பேட்ட பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து ரஜினிகாந்தும் சன்பிக்சர்ஸ் நிறுவனமும் தலைவரின் 168வது படத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குநர் சிவா இயக்க உள்ளதாகவும் அந்த டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படங்கள்
அரசியலில் இறங்குவதும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதும் உறுதி என அறிவித்துள்ள ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.