இன்னொரு படையப்பாவை எதிர்பார்க்கலாம்... அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்.. ரஜினியின் பிஆர்ஓ என்ன சொல்கிறார்?

சென்னை: அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, நடிகர்கள் சதீஷ், சூரி, ஜாக்கி ஷெராப், பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உட்பட ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே நடிக்கிறது.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் ஒரு பக்கம் தீயாய் நடைபெற்று வருகிறது.

புல்லட்டில் கையில் வீச்சருவாளுடன்..

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பட்டு வேட்டி சட்டையில் பட்டையை கிளப்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதேபோல் புல்லட்டில் செல்லும் நடிகர் ரஜினிகாந்த் புல்லட்டில் கையில் வீச்சருவாளுடன் செல்லும் செகண்ட் லுக்கும் ரிலீஸ் ஆனது.

பிஆர்ஓ ரியாஸ் அகமது

பிஆர்ஓ ரியாஸ் அகமது

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #Annaatthe ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனது கருத்தை பிலிமி பீட் தளத்துடன் பகிர்ந்துள்ளார்.

ஃபேமிலி சப்ஜெக்ட்டாகதான் இருக்கும்

ஃபேமிலி சப்ஜெக்ட்டாகதான் இருக்கும்

அவர் தெரிவித்திருப்பதாவது, பட்டு வேட்டி சட்டையில் அவர் கொடுத்திருக்கும் போஸ்.. அந்த போஸே அவ்ளோதான்.. அதுக்கப்புறம் அனைத்தும் அவுட் ஆஃப் ஃபோகஸ்தான் என கூறியுள்ளார். மேலும் நிறைய பெண் ஆர்ட்டிஸ்ட்டுகள் நடித்திருப்பதால் நிச்சயம் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டாகதான் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமா கலகலப்பா இருக்கும்.

படையப்பா மாதிரி எதிர்பார்ப்பு

படையப்பா மாதிரி எதிர்பார்ப்பு

எனக்கு படையப்பா மாதிரி ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. கொஞ்சம் முத்து படம் போல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. ஒரு பக்கம் ஆறிலிருந்து அறுபது வரை, ஒரு பக்கம் எங்கேயோ கேட்ட குரல் இந்த சாய் எல்லாம் மிக்ஸடாக தெரிகிறது. ஒரு பக்கம் தர்ம யுத்தம் தெரியுது. ஒரு பக்கம் புதுக்கவிதை தெரியுது என கூறியுள்ளார்.

அல்லது மகளாக இருக்கலாம்

அல்லது மகளாக இருக்கலாம்

மேலும் கீர்த்தி சுரேஷ் நிச்சயமாக ஜோடியாக நடித்திருக்க முடியாது. ஒன்று சகோதரியாக இருக்கலாம். அல்லது மகளாக இருக்கலாம் என கெஸ் செய்கிறேன். நயன்தாரா இருக்கும் போது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக இருக்க முடியாது என்பதால் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு படங்களும் ஜெயிக்கட்டும்

இரண்டு படங்களும் ஜெயிக்கட்டும்

அண்ணன் தங்கை கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு நல்லா வொர்க்கவுட் ஆகும் என்ற அவர் கவிக்குயில் மற்றும் முள்ளும் மலரும் படங்களை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் தீபாவளிக்கு வலிமை படமும் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்கு, தனக்கு தெரிந்து அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிய ரியாஸ் அகமது, இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனாலும் ரெண்டுமே ஜெயிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X