அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ.. புதிய சாதனை படைத்த ரஜினிகாந்தின் இன் டு தி வைல்டு நிகழ்ச்சி!

சென்னை: பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் கலந்து கொண்ட இன் டு தி வைல்டு டிவி நிகழ்ச்சி வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய டிவி நிகழ்ச்சியாக பல மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Recommended Video

SuperStar Rajinikanth's New Record | In to the Wild | Man Vs Wild | Bare grylls

பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் மோடி நிகழ்ச்சி 3.69 மில்லியன் பதிவுகளை பெற்ற நிலையில், ரஜினிகாந்தின் இன் டு தி வைல்டு நிகழ்ச்சி 4 மில்லியன் இம்பிரஷன்களை பெற்றுள்ளது.

கடந்த மே 23ம் தேதி டிஸ்கவரி சேனலில் சுமார் 12 மொழிகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்முறை

முதல்முறை

வெள்ளித்திரையில் நட்சத்திரமாக மின்னும் ரஜினிகாந்த், முதன்முறையாக சின்னத்திரையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் பியர் கிரில்ஸின் சாகச நிகழ்ச்சியான In To The Wild நிகழ்ச்சியில் பங்கேற்றார். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூரா புலிகள் சரணாலயத்தில் சில மாதங்கள் முன்னதாக நடந்த இந்த நிகழ்ச்சியை தயார் செய்து, கடந்த மார்ச் 23ம் தேதி டிஸ்கவரி ஒளிபரப்பியது.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

இன் டு தி வைல்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகை பிரை லார்சன், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 23ம் தேதி இரவு ஒளிபரப்பான சூப்பர்ஸ்டாரின் இன் டு தி வைல்டு நிகழ்ச்சி 4 மில்லியன் இம்பிரஷன்களையும் 12.4 மில்லியன் ஒன்றிணைந்த பதிவுகளையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சூப்பர்ஸ்டார் சாகசம்

சூப்பர்ஸ்டார் சாகசம்

மற்ற பிரபலங்களை போல வெறும் தனது வாழ்க்கை குறித்து மட்டும் காட்டில் நடந்தபடி பேசிக் கொண்டு இருக்காமல், களத்தில் இறங்கி 4 பெரிய சாகசங்களையும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செய்து அசத்தியது தான் இத்தனை பேரை அந்த நிகழ்ச்சி பார்க்க வைத்தற்கான காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி நிகழ்ச்சி

மோடி நிகழ்ச்சி

இந்தியாவிலேயே இதுவரை பியர் கிரில்ஸின் சாகச நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி ஒளிபரப்பப்பட்ட மோடி வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி 3.69 மில்லியன் பதிவுகளை பெற்றிருந்த நிலையில், ரஜினிகாந்தின் இன் டு தி வைல்டு 4 மில்லியன் பதிவுகளை பெற்று இந்தியளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தீபாவளிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X