என்னது ’தலைவர் 168’ லுக் லீக் ஆகிடுச்சா? வைரலாகும் ரஜினியின் கிராமத்து லுக்குக்கு காரணம் இதுதான்!

Recommended Video

Rajinikanth birthday 2019 | Rajinikanth 70th birthday | Evolution of rajini

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவர் 168' படத்தின் லுக் லீக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராமத்து லுக்கில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தில் நடிகர் ரஜினி கிராமத்து ரோலில் நடிக்கிறார் என்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த லுக் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஹைதராபாத்தில் ஷூட்டிங்

ஹைதராபாத்தில் ஷூட்டிங்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவர் 168' திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

வைரலாகும் கிராமத்து லுக்

இந்நிலையில், ரஜினியின் கிராமத்து லுக் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தலைவர் 168 படத்தில் சூப்பர்ஸ்டார் கிராமத்து சப்ஜெக்டில் நடித்து வருகிறார் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர் 168 லுக் தான் இது என ரசிகர்கள் வதந்தியை கிளப்பியுள்ளனர்.

எல்லாம் போட்டோஷாப் மாயம்

எல்லாம் போட்டோஷாப் மாயம்

ஆனால், இது 'தலைவர் 168'ல் நடித்து வரும் ரஜினியின் லுக் இல்லை என்றும், இது பேட்ட படத்தில் ரஜினியின் கெட்டப்பை வைத்து போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கப்பட்ட டம்மி லுக் என்பது தெரியவந்துள்ளது.

செம ஸ்பீடு

செம ஸ்பீடு

பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், தலைவர் 168 திரைப்படமும் படு வேகமாக உருவாகி வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி, தனது போர்ஷன்களை செம ஸ்பீடாக நடித்து முடித்து வருகிறாராம்.

வேற லெவல் எனர்ஜி

வேற லெவல் எனர்ஜி

தர்பார் படத்தை போலவே தலைவர் 168 படத்திலும் ரஜினியின் எனர்ஜி லெவல் வேற லெவலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டும் ஃபன் மிகுந்த ஜாலியான ஷூட்டிங் ஸ்பாட்டாக செல்கிறது என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X