சிவாவின் டைட்டில் சென்டிமென்ட்.. ’தலைவர் 168’ டைட்டில் இதுதானா?

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என Vல் தொடங்கி Mல் முடியும் டைட்டில் சென்டிமென்ட் ’தலைவர் 168’ படத்திலும் தொடர்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Thalaivar 168 Title revealed : சிவாவின் டைட்டில் Sentiment-வீடியோ

சென்னை: கார்த்தியின் சிறுத்தை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் நான்கு படங்களை தொடர்ந்து இயக்கினார் இயக்குநர் சிவா.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என Vல் தொடங்கி Mல் முடியும் டைட்டில் சென்டிமென்ட் 'தலைவர் 168' படத்திலும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அதே வரிசையில் ஒரு தலைப்பும் பரிசீலனை செய்யப்பட்டு வரும் தகவல் கிடைத்துள்ளது.

தலைவர் 168

தலைவர் 168

தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினியின் ‘தலைவர் 168' படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், மேலும், விவேக், சூரி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை ஏன்

சிறுத்தை ஏன்

சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்திற்கு ஏன் 'வி' சென்டிமென்ட்டை பயன்படுத்தவில்லை என்பதற்கும் காரணம் உண்டு. சூர்யாவின் சிங்கம் படம் வெளியாகி வசூல் வேட்டை நிகழ்த்திய நிலையில், சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பதால், அந்த படத்திற்கு சிறுத்தை என்ற தலைப்பு வைத்துள்ளார். மேலும், சிவாவின் பெயரில் உள்ள முதல் எழுத்தும் ‘சி' என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிகட்ட படப்பிடிப்பு

இறுதிகட்ட படப்பிடிப்பு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. பொங்கலுக்கு தர்பார் படம் ரிலீசாகவுள்ள நிலையில், நவம்பர் மாத இறுதிக்குள் தர்பார் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று ‘தலைவர் 168' படம் ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன டைட்டில்?

என்ன டைட்டில்?

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 'V'இல் தொடங்கி 'M'இல் முடியும் டைட்டில் சென்டிமென்ட் 'தலைவர் 168' படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி - சிவா கூட்டணியில் உருவாகவுள்ள அந்த படத்திற்கு ‘வியூகம்' என தலைப்பிடவுள்ளதாகவும் அதுகுறித்த ஆலோசனைகளில் சிவா ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X