தளபதி ரெஃபரன்ஸ்.. கர்ணன் படத்தில் தனுஷ் டி-சர்ட்டில் ரஜினி போட்டோ.. இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு!

சென்னை: திரையரங்குகளில் திட்டமிட்டப்படி தனுஷின் கர்ணன் படம் வெளியான நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் கர்ணன் பற்றிய பேச்சுத் தான் வைரலாகி வருகிறது.

Recommended Video

DHANUSH ACTING SHOOTING SPOTலையே அழுதுட்டோம் | Karnan Team Chat | Filmibeat Tamil

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் டி-சர்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தின் புகைப்படம் இருப்பது ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

நடிப்பு அசுரன்

நடிப்பு அசுரன்

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள நடிகர் தனுஷ், அடுத்த தேசிய விருதுக்கும் தான் ரெடி என்பது போல கர்ணன் படத்தில் தனது அசுர நடிப்பை அவிழ்த்து விட்டுள்ளார். மாரி செல்வராஜின் நுட்பமான இயக்கத்தில் கர்ண சம்பவம் களைகட்டுகிறது.

தளபதி ரெஃபரன்ஸ்

தளபதி ரெஃபரன்ஸ்

கர்ணன் படத்தில் தனுஷ் அணிந்திருக்கும் டிசர்ட்டில் அவரது மாமனாரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தின் பட போட்டோ பிரின்ட் செய்யப்பட்டு இருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரஜினியின் தளபதி பட புகைப்படமாக அது இருப்பதால் இன்னொரு குறியீடும் ஒளிந்துள்ளது.

மணிரத்னத்தின் கர்ணன்

மணிரத்னத்தின் கர்ணன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் கதையும் மகாபாரத கர்ணன் கதையின் இன்ஸ்பிரேஷன் என்பது வேற லெவல் குறியீடு. இந்நிலையில், கர்ணன் தனுஷின் டிசர்ட்டிலும் தளபதி படத்தின் போட்டோவை வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

பிரசாந்த் ரெஃபரன்ஸ்

பிரசாந்த் ரெஃபரன்ஸ்

மேலும், மற்றொரு காட்சியில் நடிகை கெளரி கிஷன் அணிந்திருக்கும் டிசர்ட்டில் நடிகர் பிரசாந்தின் புகைப்படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் பிரசாந்தின் ரசிகராக இருப்பாரோ? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

#கர்ணன், #Karnan, #KarnanFDFS கர்ணன் விமர்சனம் என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகளையும் போட்டோ எடுத்து ரசிகர்கள் பதிவிட்டு கர்ணன் படம் குறித்த தங்களின் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X