இணையத்தில் திடீரென வைரலாகும் ரஜினியின் குடும்ப ஃபோட்டோக்கள்
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாக்ஸ் ஆபீசில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார் ரஜினி.
அரசியல் பிரவேச முடிவை கைவிடுவதாக சமீபத்தில் ரஜினி வெளியிட்ட அறிவிப்பு, அவரது சினிமா ரசிகர்களை குதூகலமடைய செய்துள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், பலர் இதை வரவேற்றுள்ளனர்.

ரஜினியின் குடும்பம்
தனிப்பட்ட வாழ்க்கையில் ரஜினி, லதா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசையும், இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் வசீகரனையும் திருமணம் செய்து கொண்டனர்.

வைரலாகும் டீன்ஏஜ் ஃபோட்டோ
சினிமாவிலும் திறமையான ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் 3, விஐபி 2, கோச்சடையான், வை ராஜா வை ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் இருவரின் டீன்ஏஜ் போட்டோக்கள் இப்போது திடீரென வைரலாகி வருகின்றன.

யாரும் பார்க்காத ஃபோட்டோ
இதுவரை யாரும் பார்க்காத ரஜினியின் குடும்ப ஃபோட்டோக்களும் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றன. சினிமாவில் பிஸியான நடிகரான ரஜினி தனது குடும்பத்துடன் எந்த அளவிற்கு ஒன்றி போய் உள்ளார் என்பதை இந்த ஃபோட்டோக்கள் காட்டுவதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

தள்ளிப்போகும் அண்ணாத்த
ரஜினி தற்போது நடித்து வரும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அடுத்தடுத்த பல காரணங்களால் அண்ணாத்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











