»   »  கபாலி நெருப்பால் தகிக்கும் பெங்களூர்.. ஸ்டார் ஹோட்டல்களிலும் ரிலீஸ்.. டிக்கெட் விலை ரூ.1300

கபாலி நெருப்பால் தகிக்கும் பெங்களூர்.. ஸ்டார் ஹோட்டல்களிலும் ரிலீஸ்.. டிக்கெட் விலை ரூ.1300

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தமிழக தலைநகரான சென்னையைவிடவும், ஒருபடி முன்னால் போய் கபாலியை 'கொண்டாட' தயாராகி வருகிறது கர்நாடக தலைநகர் பெங்களூர்.

ஆம்.. தமிழகத்திலாவது தியேட்டர்களில்தான் படத்தை ஓட்டப்போகிறார்கள். ஆனால் பெங்களூரிலோ, ஹோட்டல்களில் கூட கபாலியை ரிலீஸ் செய்யப்போகிறார்களாம்.

இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக... என்ற முன்னுரையோடு டிவிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் அல்லவா.. அதை போல இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரு திரைப்படம் ஹோட்டல்களில் ரிலீஸ் செய்யப்போவதும் இதுதான் முதல் முறை.

கபாலி ஃபீவர்

கபாலி ஃபீவர்

கபாலி ஃபீவர் தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல மொழி கடந்து பல மாநில ரசிகர்களையும், ஏன் பல நாட்டு ரசிகர்களையும் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. 22ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் ஃபீவர், 100 டிகிரியில் இருந்து மெல்ல மெல்ல உயர்ந்து, 101, 102 என கூடிக்கொண்டே போகிறது.

பெங்களூரில் ஜன்னி

பெங்களூரில் ஜன்னி

இந்த ஃபீவர் ரஜினிகாந்த் பஸ் நடத்துனராக பணியாற்றி பெருமை சேர்ந்த பெங்களூரில் இப்போதே ஜன்னி வரும் அளவுக்கு கூடிவிட்டதாம். இதன் ஒரு பகுதிதான், ஹோட்டல் ரிலீஸ் என்கிறார்கள் சினிமா புள்ளிகள்.

நட்சத்திர ஹோட்டல்கள்

நட்சத்திர ஹோட்டல்கள்

பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள கிரவுன் பிளாசா, யலகங்காவிலுள்ள ராயல் ஆர்ச்சிட், குமாரகிருபா சாலையிலுள்ள லலித் அசோக், விட்டல் மல்லையா சாலையிலுள்ள ஜே.டபிள்யூ.மேரியட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் படம் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளதாம்.

அனுமதி பெற முயற்சி

அனுமதி பெற முயற்சி

திரையரங்கை தாண்டி இன்னொரு இடத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அரசின் சில துறைகளிடமிருந்து அனுமதி தேவை. இந்த பார்மாலிட்டிசை முடிக்க வினியோகஸ்தர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

ஆய்வு நடக்கிறது

ஆய்வு நடக்கிறது

கலெக்டர் நகர மாவட்டத்தின் கலெக்டர் ஷங்கரிடம் மனு நிலுவையிலுள்ளது. இதற்கு அவர் பச்சைக்கொடி காட்டினால் வெள்ளிக்கிழமை, ஹோட்டல் ரிலீஸ் உறுதி. இதுபற்றி ஷங்கரிடம் கேட்டபோது, போலீஸ், தீயணைப்பு துறை போன்ற வேறு சில துறைகளின் ஒப்புதலும் அவசியம் என்பதால், மனு ஆய்வு கட்டத்தில் உள்ளது என்றார்.

லிங்கா தயாரிப்பாளரின் ஐடியா

லிங்கா தயாரிப்பாளரின் ஐடியா

கர்நாடகாவில் கபாலி வினியோக உரிமையை பெற்றவர் கர்நாடகாவின், பிரபல தயாரிப்பாளரான, ராக்லைன் வெங்கடேஷ் (லிங்கா தயாரிப்பாளர்). அந்த உரிமையை, முன்னணி வினியோகஸ்தர் கோகுல்ராஜ் கைக்கு மாற்றிவிட்டுள்ளார் ராக்லைன் வெங்கடேஷ். இருப்பினும், படத்தின் புரமோஷனுக்காக மெனக்கெட்டு வருகிறார் வெங்கடேஷ். அவரின் ஐடியாதான் இந்த ஹோட்டல் ரிலீஸ்.

3 நாள் ஷோ

3 நாள் ஷோ

"திட்டமிட்டபடி அனுமதி கிடைத்தால், வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் தினமும் நான்கு ஷோக்களை நட்சத்திர ஹோட்டல்கள் காண்பிக்க உள்ளன. ஒரு ஷோவுக்கு ரூ.1300 கட்டணம். புக் மை ஷோ வெப்சைட்டில் டிக்கெட்டுகள் கிடைக்கும். 300 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படத்தை ரசிக்க வழி செய்யப்படும். நல்ல சவுண்ட் எஃபெக்டுடன் படம் திரையிடப்படும்" என்று கூறுகிறார் லகரி மியூசிஸ் இயக்குநர் ஆனந்த்.

English summary
Superstar Rajinikanth's up coming film Kabali is set to be screened in some of Bangalore's star hotels on July 22.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil