"தலைவா மாஸ்க்கை சரியா போடுங்க".. வாக்கிங் போன ரஜினி.. அட்வைஸ் கொடுத்த ரசிகர்கள்!

சென்னை : ரஜினி என்றாலே ஸ்டைல், மாஸ், கெத்துதான், சூப்பர் ஸ்டாரு யாரு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற அளவுக்கு அவரது புகழை உலகம் அறியும்.

Recommended Video

Thalaivar Rajinikanth கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார் | MK Stalin, Rajinikanth

தற்போது சோஷியல் மீடியாவில் ரஜினிகாந்த் வாக்கிங் போவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவா... உங்க ஃபிட்சசுக்கு இது தான் காரணமாக என்று கேட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து வருபவர் ரஜினிகாந்த்.

சும்மா வந்தாலே போதும்

சும்மா வந்தாலே போதும்

படத்துல இவர் நடிக்கனும்னுகூட அவசியம் இல்ல, யார் நடித்த படமாக இருந்தாலும், எந்த காட்சியிலாவது சும்மா இவரின் புகைப்படம் வந்தாலே போதும் திரையரங்கில் விசில் பறக்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஷூட்டிங் தள்ளிப்போனது

ஷூட்டிங் தள்ளிப்போனது

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்திருக்கவேண்டியது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஓர் ஆண்டாகத் தள்ளிப்போனது. கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனாவின் தீவிரம் குறைந்த நிலையில் டிசம்பரில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

டப்பிங் பணி மட்டுமே

டப்பிங் பணி மட்டுமே

கிட்டத்தட்ட 4 மாத இடைவெளிக்குப்பிறகு கடந்த மாதம் ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கியது. ஒரு மாதம் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அனைத்து காட்சிகளையும் முடிந்து விட்டுசென்னை திரும்பி விட்டார். இன்னும் டப்பிங் பணிகள் மட்டுமே உள்ளன.

டி ஷர்டில்

டி ஷர்டில்

தற்போது இணையத்தில் ரஜினிகாந்த் வாக்கிங் செல்வது போல ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் மாஸ்க் போட்டுக்கொண்டு, டி ஷர்டில் ஹாயாக வாக்கிங் போகிறார். அந்த டி ஷர்டில் , லைவ், லவ், ரன் என எழுதப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைவா இது தான் உங்க ஃபிட்னசுக்கு காரணமாக என்று கேட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X