தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
சென்னை: தை மாதம் எனக்கு திருமணம் ஆகிவிடும் என ரஜினிகாந்தே சொல்லிவிட்டார் என பிரபல நடிகர் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

நயன்தாரா பங்கேற்கவில்லை
தர்பார் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். படத்தின் கதாநாயகியான நயன்தாரா வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

சுவாரசிய சம்பவங்கள்
இந்நிலையில் தர்பார் படத்தில் நடித்துள்ள முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு படத்தின் ஷுட்டிங்கின் போது நடந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

ரஜினியே சொல்லிட்டார்
அப்போது இதுவரை திருமணமாகாமல் உள்ள நடிகர் யோகி பாபுவை பார்த்து, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்க, எனக்கு தை மாதம் திருமணம் நடைபெறும் என ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்தார். மேலும் திருமணத்திற்கு கண்டிப்பா நான் வர்றேன் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் கூறினார்.

மகிழ்ச்சி தராதா?
தொடர்ந்து தொகுப்பாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'பாட்ஷா' படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக் கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா..? என்றும் கேட்டார்.

முதல் வரிசை மகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய யோகி மேடையில் முதல் வரிசையில் அமர வைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார். தொடர்ந்து தர்பார் பாடலுக்கு அனிருத்தும் யோகி பாபுவும் ராக்கிங் பர்ஃபாமன்ஸ் கொடுத்தனர். இதனை கொண்டாடிய ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கரகோஷம் எழுப்பினர்.


Click it and Unblock the Notifications











