கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்!

Recommended Video

60 years of Kamal Hassan | Ungal Naan | Ilayaraja | Rajinikanth

சென்னை: கமல் 60 ஐ முன்னிட்டு நடைபெற்ற உங்கள் நான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் பிரபல இந்திப் பட இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கமலின் 60 ஆண்டு சாதனையை கவுரவிக்கும் வகையில் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தமிழ் மட்டுமின்றி இந்தி உட்பட பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபலங்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேடைக்கு சென்ற ரஜினி

மேடைக்கு சென்ற ரஜினி

தனது நெருங்கிய நண்பரின் விழாவுக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அங்கு அமர்ந்திருந்தவர்களுக்கு கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தவாரே முக்கிய பிரபலங்கள் அமர்ந்திருந்த விழா மேடைக்கு சென்றார்.

நலம் விசாரித்த ரஜினி

நலம் விசாரித்த ரஜினி

அவரை நடிகர் கமல்ஹசன் ஆரத்தழுவி வரவேற்றார். விழா மேடையில் அமர்ந்திருந்த ஜாம்பவான்களை கட்டியணைத்தும் கைக்குலுக்கியும் நலம் விசாரித்தார் ரஜினி.

ரமேஷ் ஷிப்பி

அப்போது அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ஷோலே படத்தின் இயக்குநர் ரமேஷ் ஷிப்பியை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அருகில் சென்று அவரின் கைகளை பற்றியவாரே சிரித்துப் பேசி நலம் விசாரித்தார்.

கம்பீரமாய் சல்யூட்

கம்பீரமாய் சல்யூட்

பின்னர் இருவரும் கம்பீரமாக ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்துக்கொண்டனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.

வைரலாகும் வீடியோ

இதனை பார்த்த ரசிகர்கள் ஓவென கத்தியதோடு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பலர் இந்த காட்சியை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X