தரங்கெட்ட ஆளு ரஜினிகாந்த் இல்லை.. தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்.. ரஜினி!

சென்னை: விஜய்க்கும் எனக்கும் 25 வயது வித்தியாசம் உள்ளது. நான் எப்படி அவரை பார்த்து பொறாமைப்படுவேன். விஜய்யுடன் நான் போட்டியிட்டால் எனக்கு நல்லது இல்லை. அவரு என்னுடன் போட்டியிட்டால் அவருக்கு நல்லது இல்லை. இந்த 52 வயதில் எம்ஜிஆர், என்டிஆர் சாதனைகளை முறியடித்து விஜய் முதலமைச்சர் ஆனது எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் தான் பொறாமை அல்ல என பளிச்சென ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

1996ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களும் அதிமுக - திமுக கட்சிகளுக்கு மாற்று சக்தியாக ரஜினிகாந்த் வருவார் என நினைத்தனர்.

Rajinikanth says he must won if he contest election and send wishes for Vijay turns CM

2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஆன்மிக அரசியலை தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அரசியலுக்கு இனிமேல் வரப்போவதில்லை என முடிவெடுத்து விட்டார்.

போட்டியிட்டால் வென்றிருப்பேன்: ரஜினிகாந்த் தான் அரசியலில் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆகியிருப்பேன் என இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதிமுக - திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் தான் தூதுவராக செயல்பட்டார் என்றும் விஜய் முதலமைச்சராக மாறியது அவருக்கு பொறுக்க முடியவில்லை என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தரங்கெட்ட ஆளு இல்லை: விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒரு தரங்கெட்ட ஆளு ரஜினிகாந்த் இல்லை. கமல் முதலமைச்சராக ஆகியிருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ தெரியல. அவர் ஆனாலும், சந்தோஷம் தான் படுவேன். தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வதந்திகளை திட்டமிட்டே சிலர் பரப்புகின்றனர். அதற்கு முடிவு கட்டவே உங்களை சந்தித்துள்ளேன் என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

விஜய்க்கு வாழ்த்துகள்: விஜய்யை சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். அங்கே பாஜக, இங்கே இரு பெரும் ஆளுமையான கட்சிகள், இப்படி பலத்த போட்டி இருக்கும் இடத்தில் தைரியமாக விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதை பார்த்து நானா பொறமைப்படப் போகிறேன். எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் தான். விஜய் மீது மக்கள் அதிகப்படியான நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு ஒரு 2 வருஷமாவது டைம் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக நல்லாட்சியை விஜய் கொடுப்பார் என நம்புகிறேன் அவருக்கு வாழ்த்துகள் என ரஜினிகாந்த் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X