Thalaivar 171: லோகேஷ் கனகராஜுக்கு திடீரென ரஜினி போட்ட கண்டிஷன்.. என்ன செய்யப் போறாரோ?

சென்னை: எல்சியூவில் இருக்கும் ஒரு நடிகரும் தலைவர் 171 படத்தில் நடிக்க வேண்டாம் என்கிற கண்டிஷனை ரஜினிகாந்த் போட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

லியோ படத்தின் பூஜையில் ஜார்ஜ் மரியன் இருந்ததுமே இது எல்சியூ தான் என பஞ்சாயத்து ஆரம்பித்தது. ரசிகர்கள் அதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர். கடைசியில் ஜார்ஜ் மரியம் மட்டும் தான் எல்சியூ கனெக்‌ஷன் என்பதை அறிந்து ரசிகர்கள் காண்டாகி விட்டனர்.

Rajinikanth says no actors from LCU will involve for Thalaivar 171 buzz trending

லியோ படம் ஸ்டாண்ட் அலோன் படமாகவே இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில், அவர்களையும் லோகேஷ் கனகராஜ் கடைசியில் ஏமாற்றி விட்டார்.

எல்சியூ: மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கிய கைதி படம் எல்சியூவில் இடம்பெற்றது. விஜய்யின் மாஸ்டர் படம் ஸ்டாண்ட் அலோன் படமாக உருவாகி இருந்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களும் எல்சியூவில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் தலைவர் 171வது படம் எல்சியூவில் வராது என ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

லியோவுக்கு கிடைத்த விமர்சனம்: லியோ படம் வசூல் ரீதியாக 540 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், விமர்சன ரீதியாக அந்த படம் இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் பெரிதாக சொதப்பிய நிலையில், பல பிரபலங்களுக்கே அந்த படம் பிடிக்காமல் போய் விட்டது. முதல் வாரம் டிக்கெட்டுக்கு ரசிகர்கள் அலைந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் இருந்து வார நாட்களில் தியேட்டரில் ரசிகர்களுக்காக படக்குழு அலைந்ததுதான் வேடிக்கை.

ரஜினி போட்ட கண்டிஷன்: தலைவர் 171 படத்தில் எல்சியூவில் நடித்த யாருமே இடம் பெறக் கூடாது என்கிற கண்டிஷனை ரஜினிகாந்த் போட்டுள்ளதாகவும், பிரஷ் பீஸ் நடிகர்களை தேடும் பணியில் லோகேஷ் கனகராஜ் தலை சுற்றி தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். மேலும், சில பிரபலங்களையும் களமிறக்க முயற்சித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X