Rajinikanth speech: ஜெய்பீம் மாதிரி வேண்டாம்.. கமர்ஷியலா பண்ணுங்கன்னு கேட்டேன்.. ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத் பற்றியும் ஞானவேல் பற்றியும் பேசிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. இந்திய சினிமா பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என கடந்த 50 ஆண்டுகளாக ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தின் அடுத்த நேரடி படமே வேட்டையன் தான். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படம் ஓடாத நிலையில், வேட்டையன் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

ஜெய்பீம் படத்தின் இயக்குநர் என்பதால் ரஜினிகாந்தின் படம் கதை ரீதியாக ஸ்ட்ராங்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கமர்ஷியல் படம் தான் பண்ண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக ரஜினிகாந்த் பேசியுள்ளது ரசிகர்களை சற்றே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த் பேச்சு: வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பேசும் போது இதுவரை இப்படியொரு படத்திற்கு இசையமைத்தது கிடையாது என்று பேசியிருந்தார். மஞ்சு வாரியர், ஞானவேல் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்தை பாராட்டி பேசியிருந்தனர். கடைசியாக ரஜினிகாந்த் ஆடியோ லாஞ்சில் பேசும் போது வேட்டையன் படத்தின் கதையை எப்படி தேர்வு செய்தேன். அந்த படம் என்ன மாதிரியான படம் என்பது குறித்து பேசியுள்ளார்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

மெசேஜ் சொல்றது செட்டாகாது: "நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது.. படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குநர் ஞானவேலு கிட்ட சொன்னேன்.." லோகேஷ் கனகராஜ், நெல்சன் மாதிரி என்னால படம் பண்ண முடியாது சார். ஆனால், உங்களுக்கு செட் ஆகுற மாதிரியும் மக்களுக்கு பிடிப்பது போன்ற ஒரு கதை பண்ணலாம் என்றார். அதற்குத்தான் உங்களை அழைத்தேன். ஓவர் கமர்ஷியல் வேண்டுமென்றால், லோகேஷ், நெல்சனை வைத்தே படம் பண்ணியிருப்பேனேன்னு சொன்னேன் என ரஜினிகாந்த் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

தலைவரோட ரசிகன்: தலைவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடி கணக்கில் இருக்கிறார்கள்.. அதில் நானும் ஒருத்தன்.. என இயக்குநர் ஞானவேல் வேட்டையன் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X