ரஜினிகாந்த் வீட்டில் அடுத்த ரஜினிகாந்த்.. தாத்தாவானார் தலைவர்.. தகவல் வெளியிட்ட சவுந்தர்யா!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கேரியரில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார், தலைவர் என்று தன்னுடைய ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.
இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. இது இவரது 169வது படம்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ரஜினி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து தன்னை சூப்பர்ஸ்டார், தலைவர் என்ற அளவிற்கு உயர்த்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து கதைக்களத்தை அமைத்திருந்தார் இயக்குநர் சிவா.

அண்ணாத்த படம்
படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் படத்தில் ரஜினியின் முன்னாள் நாயகிகள் மீனா மற்றும் குஷ்பூ நடித்திருந்தது படத்திற்கு கூடுதல் அட்ராக்ஷனை கொடுத்திருந்தது. மேலும் படத்தில் சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

ஜெயிலர் படம்
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் சூட்டிங்
படத்தில் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளையும் நெல்சன் திட்டமிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் சொந்த வாழ்க்கை
தனது சொந்த வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ள நிலையில், சவுந்தர்யாவின் முதல் திருமண வாழ்க்கை கசந்த நிலையில் அவர் விவாகரத்து பெற்றார். அவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், விசாகன் என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார் ரஜினிகாந்த்.

சவுந்தர்யாவிற்கு 2வது குழந்தை
இந்நிலையில் சவுந்தர்யாவிற்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்துள்ளதாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள சவுந்தர்யா, தன்னுடைய குழந்தையின் கைகளை பிடித்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குழந்தையுடன் சவுந்தர்யா
மேலும் முதல் மகன் வேத்தும் தானும் வீர் ரஜினிகாந்தை வரவேற்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் வேத் மற்றும் கணவர் விசாகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 4வது முறையாக தாத்தாவாக ஆகியுள்ளார்.

4வது முறையாக தாத்தா
முதல் மகன் ஐஸ்வர்யாவிற்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ள நிலையில், சவுந்தர்யாவிற்கும் முதல் திருமணத்தில் வேத் பிறந்தார். இந்நிலையில் தற்போது வீர் ரஜினிகாந்த 4வது பேரனாக பிறந்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











