Coolie The Power House.. பாடலை கேட்டு அனிருத்துக்கு ரஜினி அனுப்பிய மெசேஜ் இதுதான்.. அனி செம ஹேப்பி
சென்னை: கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நாளை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இதற்கிடையே படத்திலிருந்து வெளியான மூன்று சிங்கிள்களில் தி பவர் ஹவுஸ் பாடலை கேட்டு அனிருத்துக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவரை ஐந்து படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்த லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்திருப்பதால் இப்படம் எந்த மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கப்போகிறது என்ற ஹைப் எகிறியிருக்கிறது. படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமம் எல்லாம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள்.
ஆயிரம் கோடி ரூபாய் வசூல்: தமிழிலிருந்து வெளியாகும் படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை இன்னமும் தொடமுடியவில்லை. அதேசமயம் தெலுங்கு, கன்னட படங்கள் எல்லாம் அந்த மைல்கல்லை அடைந்துவிட்டன. எனவே தமிழிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் திரைத்துறை ஆர்வலர்கள் அடித்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான விடை இன்னும் 13 நாட்களில் தெரிந்துவிடும்.

ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. ஆடியோ லான்ச் என்றாலே ரஜினியின் பேச்சில் அனலும், நகைச்சுவையும் பறக்கும். எனவே இந்த விழாவிலும் அவர் தனது ட்ரேட் மார்க் பேச்சை கொடுக்கவிருக்கிறார். முக்கியமாக லோகேஷ் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர். எனவே சூப்பர் ஸ்டாரின் நகைச்சுவை பேச்சு அதையொட்டி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
படத்தின் சிங்கிள்கள்: இதற்கிடையே படத்திலிருந்து மூன்று சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் மூன்றாவதாக வெளியான தி பவர் ஹவுஸ் பாடல் ரஜினிகாந்த்துக்கு இன்னொரு ஹுக்கும் பாடலாக அமைந்திருக்கிறது. அந்தப் பாடல் மட்டும்தான் வெளியான சிங்கிள்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. பலரும் வைப் செய்துவரும் சூழலில்; அப்பாடலை கேட்டுவிட்டு ரஜினி கூறியது குறித்து அனிருத் முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அனிருத் சொன்னது: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கூலி படத்துக்காக நான் உருவாக்கிய தி பவர் ஹவுஸ் பாடலை கேட்டுவிட்டு ரஜினி எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த மெசேஜில் அவர், 'அருமை. உன்னால் ஹுக்கும் பாடலை வெல்ல முடியாது என்றுதான் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் அதை வென்றுகாட்டி மீண்டும் ஒருமுறை செய்திருக்கிறாய் என இருந்தது" என்று குறிப்பிட்டார். ஹுக்கும் பாடல் போன்று இந்தப் பாடலும் ரஜினியின் புகழை துதிக்கும்படிதான் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலுக்கு அடுத்ததாக மோனிகா பாடலும் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











