twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரிட்சைக்கு பயந்து சென்னைக்கு ஓடிவந்த ரஜினி.. ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சுவாரசிய சம்பவம்!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி என்பது குறித்து தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார்.

    நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை 166 படங்களில் நடித்திருக்கிறார்.

    அவரது 167வது படமான தர்பார் படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, படம் வரும் பொங்கல் திருநாளுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

    ஓவரா ஃபீல் பண்ணும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் என்ன விஷயம் தெரியுமா?ஓவரா ஃபீல் பண்ணும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் என்ன விஷயம் தெரியுமா?

    தமிழக அரசுக்கு நன்றி

    தமிழக அரசுக்கு நன்றி

    இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தான் சென்னைக்கு வந்தது குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கெண்டார். அவர் பேசியதாவது, தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி.. அரசுக்கு எதிராக பல விமர்சனங்கள் செய்திருக்கிறேன். அதன்பிறகும் அவர்கள் நேரு ஸ்டேடியத்தை கொடுத்திருக்கிறார்கள்.

    படிப்பு சரியாக வரவில்லை

    படிப்பு சரியாக வரவில்லை


    முதலில் என்னை ஒரு கன்னட மீடியம் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர் இங்கிலிஷ் மீடியம் பள்ளியில் சேர்த்தார்கள். எனக்கு படிப்பு சரியாக வரவில்லை,
    பின்னர் பெரிய கல்லூரி ஒன்றில் சேர்த்தார்கள். எங்கள் அண்ணன் ரொம்ப கஷ்டப்பட்டு பீஸ் கட்டினார்.

    எக்ஸாமில் இருந்து தப்ப

    எக்ஸாமில் இருந்து தப்ப

    எக்ஸாம் வந்தது. எழுதினால் கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவேன் என்று தெரியும். அதனால் பரிட்சையில் இருந்து தப்புவதற்காக பெங்களூரில் இருந்து ரயில் ஏறினேன்.

    தொலைத்துவிட்டேன்

    தொலைத்துவிட்டேன்

    அந்த ரயில் தமிழ் நாடு சென்னை போகும் என்றார்கள். சென்னைக்கு வந்தேன் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டை எடு என்றார்கள். டிக்கெட்டை தேடினால் காணோம். தொலைத்துவிட்டேன்.

    எனக்கு சப்போர்ட் பண்ணாங்க

    எனக்கு சப்போர்ட் பண்ணாங்க

    அப்போது அங்குவந்த சில சுமை தூக்கும் தொழிலாளிகள் ஏன் சார் இந்த முகத்தை பார்த்து இப்படின்னு எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. அப்போதும் அவர்கள் என்னை நம்பவில்லை.

    தமிழ் மண்ணை மிதித்தேன்

    தமிழ் மண்ணை மிதித்தேன்

    பின்னர் என் பாக்கெட்டில் இருந்த காசை அவர்களிடம் காண்பித்தேன். அப்போதுதான் நம்பினார்கள். பின்னர் தான் என்னை போக அனுமதித்தனர். இப்படிதான் நான் முதல் முறையாக தமிழ் மண்ணை மிதித்தேன்.

    எப்போதும் மறக்க மாட்டேன்

    எப்போதும் மறக்க மாட்டேன்

    எனக்கு ஆதரவாக பேசிய அந்த சுமை தூக்கும் தொழிலாளிகளை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    English summary
    Rajinikanth share how he entered in Tamil nadu. He came to Tamilnadu to escape from exams.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X