twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பளம் கொடுக்காமல் அசிங்கப்படுத்தினார்கள்.. தர்பார் மேடையில் பழைய நினைவுகளை கூறி கலங்க வைத்த ரஜினி!

    |

    சென்னை: நீயெல்லாம் பெரிய ஆளா என கேட்டு சம்பளம் கொடுக்கமால் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து விரட்டினார்கள் என நடிகர் ரஜினிகாந்த் மிகவும் உருக்கமாக பேசினார்.

    தர்பார் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏஆர் முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, விவேக், யோகி பாபு, அருண்விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொரு பிரபலமும் ரஜினியுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பேசிய ரஜினி, தான் திரைத்துறைக்கு வந்தபோது சந்தித்த பிரச்சனைகளை உருக்கமுடன் பகிர்ந்துகொண்டார்.

    அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர்

    அவர் பேசியதாவது, 16 வயதினிலே படத்தில் பரட்ட கேரக்டர் ஹிட்டாகி விட்டது. இதனை தொடர்ந்து ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தில் என்னை புக் செய்தார்.

    பணம் கொடுக்கப்படவில்லை

    பணம் கொடுக்கப்படவில்லை

    6000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. 1000 ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பதாக உறுதி கொடுத்தார்கள். ஆனால் ஷுட்டிங்குக்கு முன்பு வரை பணம் கொடுக்கப்படவில்லை.

    நாளைக்கு வா

    நாளைக்கு வா

    நானும் கேட்டு கேட்டுப்பார்த்தேன். அந்த தயாரிப்பாளர் சொன்னார், நாளைக்கு ஷுட்டிங்குக்கு வா, அட்வான்ஸ் பணம் 1000 ரூபாய் தருகிறேன் என்று. நானும் மறுநாள் ஷுட்டிங்குக்கு சென்றேன்.

    மேக்கப் போட மறுப்பு

    மேக்கப் போட மறுப்பு

    மேக்கப் போடுறதுக்கு முன்னாடி, எனக்கு என்னுடைய அட்வான்ஸ் பணம் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் நான் மேக்கப் போட முடியாது என்றேன்.

    நீயெல்லாம் ஒரு ஆளா?

    நீயெல்லாம் ஒரு ஆளா?

    அப்போது திடீரென காரில் ஸ்பாட்டுக்கு வந்த தயாரிப்பாளர், என்னை கடுமையாக திட்டி ரொம்ப அவமானப்படுத்தினார். நீயெல்லாம் ஒரு ஆளா? 4 படம் பண்ணிட்டா திமிரா?

    கெட் லாஸ்ட்

    கெட் லாஸ்ட்

    தயாரிப்பாளர் அப்படி பேசியதும் எனக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு. அப்புறம் அந்த தயாரிப்பாளர் சொன்னார், கெட் லாஸ்ட், இந்த படத்துல உனக்கு கேரக்டர் இல்லை என்று என்னை விரட்டினார்.

    இது எப்படி இருக்கு?

    இது எப்படி இருக்கு?

    திரும்பி செல்ல கார் வழங்கப்படவில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள தெருக்களில் நடந்து வந்தபோது, அங்கு 16 வயதினிலே போஸ்டர் ஒட்டி இருந்தது, அதில் இது எப்படி இருக்கு வசனம் இடம்பெற்றிருந்தது.

    எனக்கு நானே சவால்

    எனக்கு நானே சவால்

    அப்போது முடிவு செய்தேன், நான் வெற்றி பெற வேண்டும், இதே கோடம்பாக்கம் ரோட்டுல ஃபாரின் கார் வாங்கி நான் போகலன்னா நான் ரஜினிகாந்த் இல்ல என்று எனக்கு நான் சவால் விட்டுக்கொண்டேன்.

    ஃபாரின் டிரைவர் வேண்டும்

    ஃபாரின் டிரைவர் வேண்டும்

    அடுத்து இரண்டரை வருடம் கழித்து 4.25 லட்சத்துக்கு இத்தாலியன் பியாட் காரை வாங்கினேன். என்னுடைய நண்பர் முரளி கேட்டா டிரைவர் எங்கே என்று, அதற்கு சிரித்துக்கொண்டே சொன்னேன், ஃபாரின் கார், ஃபாரின் டிரைவர்தான் எனக்கு வேண்டும் என்றேன்.

    ரொம்ப மரியாதை

    ரொம்ப மரியாதை

    கொஞ்ச நாள் தேடிய பிறகு எனக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் கிடைத்தார். அவர் பெயர் ராபின்சன். அவருக்கு பெல்ட் கேப்புடன் சூப்பர் யூனிஃபார்ம் கொடுத்தேன். அவர் எப்போதுமே, எஸ் சார், சிட் சார் குட் மார்னிங் சார், பேக் சீட் சார் என்று ரொம்ப மரியாதையுடன் பேசுவார்.

    கேபி சார்க்கிட்ட ஆசி

    கேபி சார்க்கிட்ட ஆசி

    முன்னாடி சீட்டில் உட்காந்து உட்றா வண்டிய என்று சொல்லும் போது அவ்ளோ சந்தோஷம். அப்புறம் காரோட கேபி சார்க்கிட்ட ஆசிர்வாதம் வாங்க சென்றேன்.

    அவர் முன்னாடி சல்யூட்

    அவர் முன்னாடி சல்யூட்

    கேபி சார் வெளியே வந்து காரை பார்த்தார். என்ன காரை விட ராபின்சன் பெருசா இருக்கார் என்றார். ஏன்னா ராபின்சன் அவ்ளோ ஹைட். அவர் கேபி சார் முன்னாடி எனக்கு சல்யூட் அடித்து ரொம்ப மரியாதை கொடுத்தார்,

    நார்மலாய் இருக்கலாம்

    நார்மலாய் இருக்கலாம்

    கேபி சாருக்கு முன்னாடி எனக்கு மரியாதை கொடுத்ததை பார்த்து நானே பயந்துவிட்டேன். பின்னர் நான் ராபின்சனுக்கு அட்வைஸ் செய்தேன், யூனிஃபார்ம் எல்லாம் வேண்டாம் நார்மலாய் இருக்கலாம் என்றேன்.

    நான் மட்டும் காரணமல்ல

    நான் மட்டும் காரணமல்ல

    நானும் நார்மலாகிவிட்டேன். என்னை அவமதித்த நிறுவனங்களுக்கு முன்பெல்லாம் காரில் சென்று வந்தேன். இது எல்லாத்துக்கும் என் திறமை மட்டும்தான் காரணம் என்றால் தப்பாகி விடும்.

    அமைதியாய் கேட்டது

    அமைதியாய் கேட்டது

    இது எல்லாமே என் படங்கள் வெற்றி பெற்றதால், எல்லாம், நேரம், காலம், நல்ல மனிதர்கள் காரணம் என்று கூறினார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தான் அவமதிக்கப்பட்டதை சொன்ன போது அரங்கமே அமைதியாய் கேட்டது.

    English summary
    Rajinikanth shares his experience how he insulted by the producers in the beginning.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X