பத்து தல படத்தை ரஜினி ரிஜெக்ட் செய்ய காரணம் என்ன தெரியுமா?.. தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்

சென்னை: பத்து தல படத்தில் ரஜினிகாந்த்தான் முதலில் நடிக்க வேண்டியது எனவும்; ஆனால் ஒரு காரணத்தால் அவர் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார்.

மாநாடு படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான அந்தப் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து அவர் நடித்த வெந்து தணிந்தது காடும் படமும் ஹிட்டானது.

பத்து தல படத்தில் கமிட்டான சிம்பு

பத்து தல படத்தில் கமிட்டான சிம்பு

கம்பேக்கில் முதல் இரண்டு படங்களும் ஹிட்டானதை அடுத்து மூன்றாவதாக பத்து தல படத்தில் கமிட்டானார் சிம்பு. கன்னடத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட முஃப்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

கவனம் ஈர்த்த பத்து தல ட்ரெய்லர்

கவனம் ஈர்த்த பத்து தல ட்ரெய்லர்

பத்து தல படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தில் சிம்பு கேஜிஆர் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையையும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

வின்டேஜ் சிம்புவாக அதகளம்

வின்டேஜ் சிம்புவாக அதகளம்

பத்து தல படத்தின் ட்ரெய்லர் விழாவில் ஹைலைட்டாக அமைந்தது சிம்புதான். பழைய சிம்பு எப்படி மேடையில் பாடி, நடனமாடி, மாஸ் ஸ்பீச் கொடுப்பாரோ அப்படி மாறியிருந்தார் சிம்பு. லூசுப் பெண்ணே பாடலை பாடி அதற்கு அட்டகாசமாக நடனமாடுவதை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும் மேடையில் பேசிய சிம்பு, "இந்த முறை சும்மா வரவில்லை. வேறு மாதிரி வந்திருக்கேன். இனி விடவே மாட்டேன். என்ன செய்யப்போறேன் அப்டிங்றத நீங்க எல்லோரும் ஏசி ரூம்ல உட்கார்ந்து பாருங்க' என சூளுரைக்கவும் செய்தார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ரஜினியிடம்தான் முதலில் போனதா பத்து தல

ரஜினியிடம்தான் முதலில் போனதா பத்து தல

பத்து தல படமானது மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் படத்தை தயாரித்திருக்கும் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், "பத்து தல படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் நடிக்க வேண்டியது. ஆனால் இப்படம் ரீமேக் படமாக அமைந்திருப்பதால் இதனை வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகுதான் இப்படத்தில் நடிக்க சிம்புவிடம் அணுகினோம். இந்தக் கதாபாத்திரத்திற்கு சிம்பு கனகச்சிதமாக பொருந்திப்போயிருக்கிறார்" என்றார்.

சிம்பு நடிக்கும் அடுத்த படமும் ரஜினிக்கானதா?

சிம்பு நடிக்கும் அடுத்த படமும் ரஜினிக்கானதா?

பத்து தல படத்தில் முதலில் ரஜினிதான் நடிக்க வேண்டியது என தயாரிப்பாளர் கூறியிருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சூழலில் சிம்பு அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தின் கதையும் ரஜினிக்காகத்தான் தேசிங்கு பெரியசாமியால் எழுதப்பட்டது என்ற ஒரு தகவல் உலாவிவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X