ஓடோடி வந்த சூப்பர் ஸ்டார்.. துக்கத்தின் உச்சம்.. AVM சரவணன் உடலுக்கு பக்கத்துலயே உட்காந்துட்டாரே

சென்னை: மூத்த தயாரிப்பாளர் AVM சரவணனின் மறைவு தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 86வது வயதில் வயது மூப்பு காரணமாக மறைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரபலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். நடிகர் சிவக்குமார் அவரது மகன் நடிகர் சூர்யா என இருவரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது சூர்யா கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார். இப்படி இருக்கும்போது, துயரச் செய்தியைக் கேட்டதும் உடனே ஓடோடி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

AVM சரவணனின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் சந்தித்து தனிப்பட்ட முறையில் ஆறுதல் தெரிவித்தார். தமிழ் சினிமாவின் இமயங்களாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது வளர்ச்சியிலும் பங்கு வகித்தவர் என்று AVM சரவணனைக் குறிப்பிடலாம். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது தயாரிப்பில் மொத்தம் 9 படங்களில் நடித்துள்ளார்.

அதில் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் முரட்டுக்காளை. 80 கால கட்டங்களில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சரியப்படவைத்த படம். அதன் பின்னர் 2000 களில் வெளியான சிவாஜி படமும் மிகவும் முக்கியமான, பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை தொடங்கி சினிமா வாழ்க்கை உள்ளிட்ட அனைத்திலும் பக்கபலமாக இருந்தவர் AVM சரவணன்.

Rajinikanth Sit With Very Sad Nearby AVM Saravanan Dead Body Which Express Thankfulness
Photo Credit:

சோகத்தின் உச்சத்தில் ரஜினி: அவரது மறைவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது. தகவல் கேட்டதும் உடனே ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், AVM சரவணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் நீண்ட நேரம் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டார். மிகவும் இறுக்கமான மற்றும் சோகமான முகத்துடன் AVM சரவணனுடனான தனது நினைவுகளை நினைத்து கொண்டு சோகத்தில் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு செய்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் சிலரோ, AVM சரவணனின் மறைவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு என்று பேசி வருகிறார்கள்.

இரங்கல்: அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார், " நேர்மையான மனிதர் என்றால் அது AVM சரவணன் சார் தான். எனது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களின் போது உடன் இருந்தவர். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். 80களில் பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை, 2000களில் பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் சிவாஜி, அதேபோல், இந்த 2020 கால கட்டத்திலும் பிரமாண்டமான செலவில் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது" என்று வருத்தத்துடன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X