Rajinikanth speech: தேசிய விருது கிடைக்கும்னு சொன்னாங்க.. உடனே பேக் அடிச்சிட்டேன் - ரஜினிகாந்த்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இளம் நடிகர்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கடைசியாக மேடை ஏறி பேசிய ரஜினிகாந்த் லால் சலாம் படத்துக்கான அர்த்தத்தையும் இந்தப் படத்தின் முக்கிய நோக்கம் என்பது குறித்தும் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Rajinikanth speech at Lal Salaam Audio Launch and he explains about the title too

விஜயகாந்த், பவதாரிணிக்கு அஞ்சலி: லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மேடையேறி பேசுவதற்கு முன்பாக ஜெயலலிதா, கருணாநிதி என இரு ஆளுமைகள் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தவர் என் நண்பர் விஜயகாந்த் என பேசி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவு தாங்கிக் கொள்ள முடியாத துயரம் என பேசி விட்டு அவருக்கும் அஞ்சலி செலுத்தி பின்னர் தனது பேச்சை தொடங்கினார் ரஜினிகாந்த்.

லால் சலாம் அர்த்தம்: லால் என்றால் சிகப்பு, லால் என்றால் புரட்சி, சலாம் என்றால் வணக்கம் புரட்சி வணக்கம் என்பதுதான் இந்தப் படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம் என புரிய வைத்த ரஜினிகாந்த். ஆரம்பத்தில் இந்தப் படத்தின் கதையை முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லும் போது, இது தேசிய விருதுக்கான கதை என்றார். உடனே நான் பேக் அடிச்சுட்டேன். நமக்கு அவார்டு மேல வெறுப்பு எல்லாம் கிடையாது. எப்பவுமே ரிவார்டு மற்றும் டப்பு தான் முக்கியம் என தனது ஸ்டைலில் பேசி அசத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

கதை புடிச்சிப்போச்சு: பின்னர் விஷ்ணுவிடம் பேசும் போது அந்த கதையை முழுசா படிச்சேன். இந்த படத்துல யாராவது ஒரு பெரிய நடிகர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். சில நாட்கள் கழித்து நானே அதை பண்றேன்னு சொன்னதும் என் மகள் முகத்தில் எந்தவொரு ரியாக்‌ஷனும் இல்லை. ஆரம்பத்தில் சில தயாரிப்பாளர்கள் இந்த கதையை நம்பி எடுக்க முன் வரவில்லை. சிலர் தாமதப்படுத்தினர். லைகா தமிழ்குமரன் கதையை கேட்டதும் பண்ணலாம் என சொல்லி விட்டார். இந்த நேரத்துக்கான தேவையான அரசியல் கருத்துக் கொண்ட படமாக லால் சலாம் இருக்கும் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X